மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Monday 29 July 2013

Percubaan UPSR negeri kedah 2013 : Bahasa Tamil Kertas 2 (தமிழ் மொழி முன்னோட்டத் தேர்வு கெடா மாநிலம்)

கீழ்காணும் வாக்கியங்களை அமைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை: தனி வாக்கியமாக இருத்தல் வேண்டும், குறிப்புச் சொல் அல்லது விளக்கச் சொல் கட்டாயம் வாக்கியத்தில் இடம்பெற வேண்டும்.



வழிகாட்டிக் கட்டுரையை சிறுவர் மையமாக வைத்து யோசித்து எழுதவும். கற்பனையாற்றல்மிக்கவையாக இருக்கட்டும். அந்த மாணவி என்ன நினைக்கிறார் என்பதைப் பூர்த்தி செய்து கதையை வழிநடத்தவும். இப்படத்தின் முடிவு என்னவாக இருக்கும்? ஆர்வமுள்ள மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் என்னைத் தொடர்புக் கொண்டு தெரியப்படுத்தலாம். இப்படத்திற்கான கதைக்கும் எப்படி 16-20 புள்ளிகள் பெறுவது என்பதைப் பற்றி சொல்கிறேன். (ஆசிரியர் கே.பாலமுருகன் : 0164806241)

Percubaan UPSR negeri kedah 2013 : Bahasa Tamil Kertas 1

தாள் 1 தமிழ் மொழி: கெடா மாநிலம். தாள் ஒன்றில் மாணவர்கள் கேள்வியைக் கவனமாகப் படிக்க வேண்டும். முதலில் கேள்வியின் தேவை எது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 



Friday 26 July 2013

சிறுவர் சிறுகதை ::-- அல்ட்ராமேன் சைக்கிள்

சன்னலுக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளை வெகுநேரம் கதவை உரசிக் கொண்டிருந்தது. முகிலன் மெல்ல கண்களைத் திறந்தான். சன்னல் கதவின் சிறு துளையிலிருந்து உள்ளே நுழைந்த ஒளி அவன் முகத்தில் படர்ந்தது.

தம்பி அழும் சத்தம் அவனுடைய காதைக் குடைந்தது. வெளியே வந்து சத்தம் கேட்டத் திசையை நோக்கிச் சென்றான். ஒரு கால் உடைந்த தம்பியின் சைக்கிள் முன்வாசல் கதவோரம் கிடந்தது. 

“தம்பி சைக்கிள் உடைஞ்சிருப்பா” என அம்மா கூறிவிட்டு அவனைச் சமாதானப்படுத்துவதில் மும்முரமாக ஆனார்.

எப்பொழுதும் இந்நேரம் முகிலனின் தம்பி சைக்கிள்தான் உலா வந்து கொண்டிருப்பான். மதியம் மெல்ல தொடங்கும் அந்தச் சைக்கிள் சத்தம் மாலை முகிலனின் அப்பா வரும்வரை அடங்காது. இரவில் அவன் படுத்துறங்கியதும் முகிலனின் அப்பா சைக்கிளை எடுத்து மேலே மாட்டி வைத்துவிடுவார்.

இப்பொழுது சைக்கிள் பரிதாபகாமக் கிடந்தது. ஒரு கால் இல்லாமல் சைக்கிளைத் தம்பியால் ஓட்ட முடியாது. அம்மா என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பியிருந்தார். தம்பி அழுகையை நிறுத்துவதாகத் தெரியவில்லை. தேம்பி தேம்பி அழுதான்.