மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Thursday 31 May 2018

இனி மிருகக்காட்சி சாலைகள் வேண்டாம் - மாணவர் முழுக்கம் தலைப்பு ஒரு மாதிரி




கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தியா பூனேயில் புலியுடன் தம்படம் எடுக்கச் சென்று தவறி விழுந்து புலி தாக்கி இறந்துபோன இளைஞரின் செய்தியை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவர் மீது பரிதாபப்பட்டு புலியையும் தாக்கிப் பேசியிருப்பீர்கள். ஆனால், சகோதரர்களே என்னுடைய வாதம் அதுவல்ல. அது புலியின் தவறென்று நினைக்கிறீர்களா? நம் வீட்டுக்குள் புகுந்த அந்நியன் நமக்கு ஆபத்து விளைவிப்பான் என பயந்து நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ள எதிர்த்துச் சண்டையிடமாட்டோமா?
இன்று மனிதர்களின் அலட்சியங்களே அவையனத்திற்கும் காரணம். அதுவும் மிருகக்காட்சி சாலைகளில் நாம் காட்டும் அலட்சியங்களே மிருகங்களின் அழிவிற்கு வித்திடுகிறது.

யானை விடுதலைக்கு யாசிக்கின்றது;

ஓராங் ஊத்தான் ஓரங்கட்டி நிற்கிறது

முதலை முனகுகிறது

புலி புலம்புகிறது

பாம்பு பயத்தில் பார்க்கிறது

இதுதான் இன்றைய மிருகக்காட்சி சாலைக்குச் சென்றால் உங்களால் பார்க்க முடிந்தது. முன்பு போல் ஓடியாடி பார்ப்பவர்களுக்கு வித்தைக் காட்டும் மிருகங்கள் அங்கு இருப்பதில்லை. ஏன் என்று தெரியுமா? முறையான பராமரிப்பு இல்லாததால் மிருகங்கள் யாவும் தெம்பின்றி நாள் முழுவதும் உறங்கிக் கொண்டே இருக்கின்றன.

மிருகம் என்பது காட்டில் வேட்டையாடி வாழும் இயல்பியலைக் கொண்ட உயிரினம் ஆகும். மனிதர்கள் கண்டு இரசிக்க அதனைக் கூண்டில் அடைத்து முறையான பாதுகாப்பில்லாமல் மிருகவதைன் செய்வதைத்தான் மிருகக்காட்சி சாலை என்று சுருக்கமாகச் சொல்லலாம். அத்தகைய ஒன்று நமக்கு வேண்டுமா?

கபாலி படத்தில் கூண்டில் அடைப்பட்டிருக்கும் பறவைகளைப் பார்த்து ரஜினி இவ்வாறு சொல்கிறார் “பறவைகளின் இயல்பு வானில் பறப்பது; அதனை ஏன் கூண்டில் அடைத்து அழகு பார்க்கிறாய். அதனைப் பறக்க விடு. வாழ்வா சாவா என்பதை அதுவே முடிவு செய்து கொள்ளட்டும். உன்னுடைய கூண்டில் அடைத்துக் காக்கும் கருணை அதன் மரணத்தைவிட கொடுமையானது

நன்றி