மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Wednesday, 4 May 2016

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை வெளிக்கொணரும் கவிதைகள்


1
எல்லாம் தீமைகளையும்
எரித்துவிட்டு
வெந்து நிற்கும்
தனித்த மரம்.

2

எல்லோரும் ஏறிச் சென்ற
பிறகும்
இன்னும் யாராவது ஏறுவார்கள்
எனக் காத்திருக்கும்
ஒற்றை ஏணி.





3

முடிந்துவிடும்
என நாள்தோறும்
நம்பிக்கையோடு சென்று
முடிக்கப்படாத ஏராளமான
வேலைகளுடன்  வீடு திரும்பும்
மிஞ்சிய பறவை.

4

எத்தனை கல்லடி
பெற்றாலும்
சிற்பியின் நடுக்கம் தழுவாத
ஆளுமை.

5

என்றாவது ஒருநாள்
நன்றி சொல்வதற்காகவாது மீண்டும் வருவார்கள்
என மாணவர்களுக்காக
எல்லாம் காலங்களிலும்
அதே இடத்தில்
காத்துக் கொண்டிருக்கும்
ஆசிரியர்கள்.

6

வெண்கட்டியிலேயே கரைந்த
கல் மண்டபத்தின்
வெண்மையில் தோய்ந்த
தூண்கள்.



அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள். உங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை நினைவுக்கூறும் இந்நாளில் ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொள்ளும் பழக்கத்திலிருந்து வெளிவந்து கூட்டாக இணைந்து செயல்படுவோம்.

- கே.பாலமுருகன்

Monday, 25 April 2016

பாடநூலில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கட்டுரை தலைப்புகள்/ தொகுப்பு ( 4,5,6 ஆம் ஆண்டு)

4,5,6 ஆம் ஆண்டுக்கான தமிழ்மொழிக் கட்டுரைக்கான தலைப்புகளை இங்கே பதிவிரக்கம் செய்து கொள்ளவும்.

உங்கள் பள்ளியின் தமிழ்மொழிப்பாடக்குழுவில் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

https://www.mediafire.com/?j459xyemi8ja6ha




Friday, 22 April 2016

தமிழ்மொழி முதலாம் தவணை மாதச் சோதனை (ஆண்டு 1 - ஆண்டு 2)

இங்கே பதிவிரக்கம் செய்து கொள்ளவும்:

தமிழ்மொழி முதலாம் ஆண்டு மார்ச் சோதனை
https://www.mediafire.com/?2f9h9cxbka0idk8

விடைகள்:

https://www.mediafire.com/?2f9h9cxbka0idk8


தமிழ்மொழி இரண்டாம் ஆண்டு மார்ச் மாதச் சோதனை:

https://www.mediafire.com/?bthfi5tkd7itpjy