யு.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கவனத்திற்கு, தன்கதை: எல்லாம் பொருள்களும் இறுதியில் குப்பை மேட்டில்தான் கிடக்கும். கொஞ்சம் மிஞ்சினால் கால்வாய். அடுத்ததாக ஏற்றுமதி செய்யப்படும் எல்லாம் பொருள்களும் சீனக் கடைகளுக்குத்தான் கொண்டு செல்லப்படும். அதுவும் கண்ணாடி பேழையை எங்கள் காலத்திலிருந்து இன்னும் விட்டு வைக்கவில்லை. தெய்வங்களே, கொஞ்சம் வேறு மாதிரி யோசியுங்கள். சிறுவர்களின் எல்லைகளைக் கட்டுப்படுத்தாதீர்கள். உங்களால் அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை என்பதற்காக, குப்பை மேட்டையும், கால்வாயையும், சீன முதலாளிகளையும் கண்ணாடி பேழைகளையும் சட்டமாக்காதீர்கள், கட்டாயமாக்காதீர்கள்.
கற்றுக் கொள்வதிலும் பெற்றுக்கொள்வதிலும் வயதும் அனுபவமும் மிகப்பெரிய அகங்காரங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. சிறியவர்களிடமிருந்து பெறுவதையும் அனுபவம் குறைவானவர்களிடடமிருந்து கற்றுக்கொள்வதையும் பெரிய கௌரவக் குறைச்சலாகப் பார்க்கப்படுகிறது. இறுதியில் பாதிப்பிற்க்குள்ளாகுவது மாணவர்கள்தான். 1. கட்டுரையில் உரையாடலைப் பயன்படுத்துவது எங்கனம் சாத்தியம்? தன்கதை என்பது வாழ்க்கை வரலாறு. பொருளின் வாழ்க்கை வரலாற்றை கட்டுரையாக மட்டுமே எழுத முடியும். 2. கட்டுரையில் பின்னோக்கு உத்தி எங்கனம் பயன்படுத்த இயலும்? உத்தி என்பது கதைக்குரியது. வசனம்/உரையாடல் என்பதும் கதையில் பாவிக்கக்கூடியது. இதை இரண்டையும் கட்டுரையில் எழுதுமாறு காலம் காலமாகச் சொல்லித் தருகிறோம் என்பதற்காக அதனை மாற்ற முடியாது பிழையாகச் சொல்லிக்கொடுத்தாலும் பரவாயில்லை ஆனால் அகங்காரங்களை விட்டுக்கொடுக்க முடியாது என இவர்கள் பிடிக்கும் முரடு யாரைப் பாதிக்கப் போகின்றது? தொடர்பிற்கும் விவாதத்திற்கும்: 0164806241
No comments:
Post a Comment