உங்கள் மாணவர்களுடன்/உங்கள் பிள்ளைகளுடன் குறைந்தபட்சம் 5 நிமிடம் அவர்களுக்குப் பிடித்த சினிமாவைப் பற்றியும், அவர்களுக்குப் பிடித்த காற்பந்து குழுவைப் பற்றியும், அவர்கள் பார்த்து இரசித்த ஓவியத்தைப் பற்றியும் பேசுங்கள். அவர்களுக்கு நாம் கொடுத்த அனைத்து சோர்வும் அந்த நேரத்தில் நீங்கும்.
வகுப்பில் பாடத்தைத் துவங்குவதற்கு முன் ஏதாவது ஒரு நகைச்சுவை துணுக்கைச் சொல்லுங்கள். அவர்கள் சிரிக்கும்போதே அவர்கள் கற்பதற்குத் தயாரிகிவிடுவார்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நாளில் 30 நிமிடவாது ஓடியாடி விளையாடி களைப்பதற்கு நேரத்தைக் கொடுங்கள். அவர்களுக்குரிய நேரம் அனைத்தையும் நீங்களே வடிவமைத்தைவிட அவர்களிடம் கொஞ்சம் கேளுங்கள்.
நீங்களும் இறுக்கமாக, அவர்களையும் இறுக்கமாக்கி நீங்கள் எதைக் கற்றுக்கொடுக்கப் போகிறீர்கள்?
இலகுவாக்குங்கள். இலவாகுங்கள்.
கற்றல் இலகுவாகுவதிலிருந்தே தன் ஆழத்தைச் சென்றடைகிறது.
அறிவுரை இல்லை, ஆலோசனை மட்டுமே.
உங்கள் ஆசிரிய நண்பன்
கே.பாலமுருகன்
No comments:
Post a Comment