வணக்கம் மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவும் பொருட்டே இதனைப் பகிர்கிறேன். கீழ்க்கண்ட தமிழ்மொழித் தாள் இரண்டு எனது சொந்தத் தயாரிப்பு. வகுப்பில் மாணவர்களுக்குப் பயிற்சியாகக் கொடுக்க மட்டுமே அனுமதி உண்டு. வேறு வகையில் என்னுடைய அனுமதியில்லாமல் பயன்படுத்துவது தவறாகும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு மாதிரிப் பயிற்சி மட்டுமே. Hanya boleh digunakan sebagai latihan tambahan dalam kelas sahaja. Hakcipta terpelihara.
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR
திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)
Monday, 20 July 2015
Saturday, 18 July 2015
கற்பனைக் கட்டுரை: நான் விண்வெளியில் மாட்டிக்கொண்டால்
முன்னுரை
நான்
பலமுறை வீட்டுக்கு வழித் தெரியாமல் மாட்டிக் கொண்டதுண்டு. அப்பொழுதெல்லாம் எனக்கு நிறைய
அனுபவங்கள் கிடைத்துள்ளன. அதே போல ஒரு நாள் விண்வெளியில் மாட்டிக்கொள்ள வேண்டுமென நான்
ஆசைப்படுகிறேன்.
கற்பனை
1
ஒருவேளை
நான் விண்வெளியில் மாட்டிக்கொண்டால் முதலில் ஆகாயத்தில் மிதந்து விளையாடுவேன். புவி
ஈர்ப்பு சக்தி அங்குக் குறைவாக இருப்பதால் என்னால் விழாமல் மிதக்க முடியும். இதன் மூலம்
எனக்கு மனத்திலுள்ள கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
கற்பனை
2
நான்
விண்வெளியில் மாட்டிக்கொண்டால் அப்படியே மிதந்து நிலாவிற்குச் செல்வேன். நிலாவில் மனிதர்கள்
வாழ முடியுமா என்பதை ஆராய்ந்து வருவேன். இதன் மூலம் நான் எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக
வாய்ப்புண்டு. மேலும் நாசாவுக்குத் தகவல் அனுப்பி என் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பேன்.
கற்பனை
3
நான்
விண்வெளியில் மாட்டிக்கொண்டால் பூமியின் அழகைக் கண்டு இரசிப்பேன். பூமியிலேயே வாழ்பவர்களால்
பூமியின் மொத்த அழகையும் கண்டு இரசிக்க முடியாது. நான் அந்த ஆசையைத் தீர்த்துக் கொள்வதோடு
என் நண்பர்களுக்கும் பூமியின் அழகை வர்ணித்துக் கூறுவேன்.
கற்பனை
4
நான்
விண்வெளியில் மாட்டிக்கொண்டால் நாசாவின் விண்கோள்களைச் சுற்றிப் பார்ப்பேன். ஆகாயத்திலுள்ள
நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் விண்கோள்களை நேரில் சென்று அஃது இயங்கும் விதங்களைக்
காண்பேன். இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பொது அறிவைப் பெறுவேன்.
கற்பனை
5
_____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
முடிவுரை
ஒருவேளை
நான் விண்வெளியில் மாட்டிக்கொண்டால் மேற்கண்ட என் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்வதோடு
நாட்டிற்கும் உலகிற்கும் பெருமை சேர்க்கும் வகையிலும் செயல்படுவேன். விண்வெளியில் மாட்டிக்கொண்டாலும்
மன வலிமையுடன் இருந்து என் ஆசைகளை இறைவனின் துணையோடு அடைந்துவிடுவேன்.
- கே.பாலமுருகன்
Sunday, 5 July 2015
Saturday, 4 July 2015
Subscribe to:
Posts (Atom)