மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Saturday, 18 July 2015

கற்பனைக் கட்டுரை: நான் விண்வெளியில் மாட்டிக்கொண்டால்

முன்னுரை

நான் பலமுறை வீட்டுக்கு வழித் தெரியாமல் மாட்டிக் கொண்டதுண்டு. அப்பொழுதெல்லாம் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளன. அதே போல ஒரு நாள் விண்வெளியில் மாட்டிக்கொள்ள வேண்டுமென நான் ஆசைப்படுகிறேன்.

கற்பனை 1

ஒருவேளை நான் விண்வெளியில் மாட்டிக்கொண்டால் முதலில் ஆகாயத்தில் மிதந்து விளையாடுவேன். புவி ஈர்ப்பு சக்தி அங்குக் குறைவாக இருப்பதால் என்னால் விழாமல் மிதக்க முடியும். இதன் மூலம் எனக்கு மனத்திலுள்ள கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

கற்பனை 2

நான் விண்வெளியில் மாட்டிக்கொண்டால் அப்படியே மிதந்து நிலாவிற்குச் செல்வேன். நிலாவில் மனிதர்கள் வாழ முடியுமா என்பதை ஆராய்ந்து வருவேன். இதன் மூலம் நான் எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக வாய்ப்புண்டு. மேலும் நாசாவுக்குத் தகவல் அனுப்பி என் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பேன்.

கற்பனை 3

நான் விண்வெளியில் மாட்டிக்கொண்டால் பூமியின் அழகைக் கண்டு இரசிப்பேன். பூமியிலேயே வாழ்பவர்களால் பூமியின் மொத்த அழகையும் கண்டு இரசிக்க முடியாது. நான் அந்த ஆசையைத் தீர்த்துக் கொள்வதோடு என் நண்பர்களுக்கும் பூமியின் அழகை வர்ணித்துக் கூறுவேன்.

கற்பனை 4

நான் விண்வெளியில் மாட்டிக்கொண்டால் நாசாவின் விண்கோள்களைச் சுற்றிப் பார்ப்பேன். ஆகாயத்திலுள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் விண்கோள்களை நேரில் சென்று அஃது இயங்கும் விதங்களைக் காண்பேன். இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பொது அறிவைப் பெறுவேன்.


கற்பனை 5
_____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

முடிவுரை

ஒருவேளை நான் விண்வெளியில் மாட்டிக்கொண்டால் மேற்கண்ட என் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்வதோடு நாட்டிற்கும் உலகிற்கும் பெருமை சேர்க்கும் வகையிலும் செயல்படுவேன். விண்வெளியில் மாட்டிக்கொண்டாலும் மன வலிமையுடன் இருந்து என் ஆசைகளை இறைவனின் துணையோடு அடைந்துவிடுவேன்.

-    கே.பாலமுருகன்


No comments:

Post a Comment