மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Saturday, 14 May 2016

ஆசிரியர் தின வாழ்த்து: போதி மரங்களே...


ஆசிரியம்

இருள் நிறைந்த கோட்டைக்குள்
நிமிர்ந்தெரியும்
ஒற்றைத் துளி
வெளிச்சமே.
கரைந்தொழுகி மடியும்
இறுதி வாய்க்கால்வரை
பாடம் புகட்டும்
பெட்டகமே.
பல்லாயிரம் அழுகைக்குள்ளிருந்து
மீண்டெழும்
பேரலையின் சப்தமே.
எத்தனை கைகள்
அமிழ்த்தினாலும்
சிதையாமல் களையாமல்
உருவெடுக்கும்
ஒரு மாபெரும் உளியின்
ஆயிரம்கால் சிற்பமே.
விதைக்குள்
விதையாய் இருந்து
விண்தொடும்வரை
இச்சமூகம்
ஏறி நிற்கும்
வேர்களாய் வாழ்ந்து
மறையும்
மண்ணின் வரலாறே.
எனக்குப் போதித்த
அனைத்து 'போதி' மரங்களுக்கும்
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

-ஆசிரியர் கே.பாலமுருகன்

No comments:

Post a Comment