மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Tuesday, 9 September 2014

மலேசியாவின் முதல் தமிழ் சிறுவர் மர்ம நாவல் வெளியிட்டு விழா

  
வணக்கம். வருகின்ற 20.09.2014 (சனிக்கிழமை) மாலை மணி 5.15க்கு சுங்கை பட்டாணி, The Carnivall Water Theme Park, LA FIESTA HALL மண்டபத்தில் சிறுவர்களுக்கான முதல் மர்ம நாவல் மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் வெளியிட்டு விழா நடைபெறவிருக்கின்றது..

இந்த நாவல் வெளியிட்டு விழாவை கெடா மாநில கல்வி இலாகாவின் மொழிப்பிரிவு உதவி இயக்குனர் திரு.பெ.தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பிக்கவிருக்கிறார். சிறுவர் நாவல் விமர்சனத்தை முதன்முறையாகத் தமிழ்ப்பள்ளி மாணவியான .பிரியங்கா அவர்கள் மேற்கொள்கிறார். இந்த நாவல் வெளியிட்டு விழா, கெடா மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான தமிழ்மொழிப் பாடக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கிறது. இந்த முதல் வரலாற்று முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கற்பனையாற்றலையும், இலக்கிய மொழிநடையையும், வர்ணனை செய்யும் ஆற்றலையும், சிறுகதை எழுதும் ஆற்றலையும் வளர்க்கவே இந்தச் சிறுவர் நாவல் முயற்சியை ஆசிரியரும் எழுத்தாளருமான கே.பாலமுருகன் மேற்கொண்டுள்ளார். உயர்நிலை சிந்தனையுடன் சிறுகதையை எழுத இந்த நாவல் துணைப்புரியும். ஒரு சிறுவர் நாவலின் விலை 10.00 ரிங்கிட் மட்டுமே.

பள்ளி மாணவர்களுக்கான சிறுவர் நாவல் பிரதிகளை நாவல் வெளியிட்டு விழாவிலேயோ அல்லது அதற்கு முன்பாகவோ தெரிவித்துப் பெற்றுக்கொள்ள ஆசிரியர் கே.பாலமுருகன் அவர்களைத் 0164806241 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம். ஒருவர் பத்து நாவல்கள் வாங்கி நம் சிறுவர்களுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் அன்பளிப்பு வழங்கும் வகையிலும் நன்கொடை தரலாம்.

மலேசிய இந்திய மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்க்கும் நோக்கிலேயே கடாரத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள தமிழின் முதல் சிறுவர் நாவல் முயற்சியைக் மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் ஆதரிக்கும் எனப் பெரிதும் நம்பப்படுகிறது.

  
.'மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்' எனும் என்னுடைய மலேசியாவின் முதல் சிறுவர் மர்ம நாவலை வாசிக்கவும் வெளியிட்டு விழாவிற்கு வரவும் இவர்கள் தயாராகிவிட்டார்கள். நீங்கள்? மலேசிய சிறுவர்களின் வாசிப்புப் பழக்கத்தை இந்தச் சிறுவர் நாவல் மேலும் தீவிரப்படுத்தும். நாவல் வாசிப்புப் போட்டி, நாவல் விமர்சனப் போட்டி, நாவல் இரசனை போட்டி, வாசிப்பு வாரம் எனப் பலவகையான நிகழ்ச்சிகளுக்கும் நீங்கள் இந்தச் சிறுவர் நாவல்களை வாங்கி ஆய்த்தப்படுத்தலாம். தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241




.

No comments:

Post a Comment