இவ்வருடம் மே மாதத்தில் மலாயாப்பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரவை ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான சிறுவர் சிறுகதை எழுதும் கருத்தரங்கத்தை எழுத்தாளர்/ ஆசிரியர் கே.பாலமுருகன் 2 மணி நேரங்கள் வழிநடத்தினார். மாணவர்கள் சிலாங்கூர் வட்டாரத்திலிருந்து வந்து கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சிப்பட்டறை இலவசமாகவே தமிழ்ப்பேரவையால் நடத்தப்பட்டது.
சிறுகதை தொடங்கும் முறை, கதையோட்டம், கதைக்கான சிறந்த முடிவுகள் என சிறுகதைக்கான பலவகையான் படைப்பிலக்கியக் கூறுகள் கலந்துரையாடப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment