மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Thursday, 19 February 2015

சிறுகதை: கரடிப் பொம்மை (வழிகாட்டிக் கட்டுரை)


திடீரென உறக்கத்திலிருந்த விழித்த சிவா தனது பென்சில் பெட்டியைத்தான் முதலில் பார்த்தான். அதிலிருந்த 3 வெள்ளி பத்திரமாக இருந்தது. யாருமற்ற வகுப்பறை வெறிச்சோடிப் போயிருந்தது. சிவா பசியில் அப்படியே மேசையின் மீதே உறங்கிவிட்டிருந்தான். அவனுக்கு வேண்டியது 5 வெள்ளி. சோகத்தில் தலைக் கவிழ்ந்தான்.

“டேய்ய்ய் சிவா! உன்னெ சாப்டெ கூப்டேன் யேன் நீ இப்படி அடம் பிடிக்கற?” என வகுப்பிற்குள் நுழைந்த வாசு கொஞ்சம் அதட்டலாகவே கேட்டான்.

“ஒன்னும் இல்லடா.. பசிக்கல” என சிவா மீதி சொற்களை உள்ளுக்குள்ளே விழுங்கினான்.

“நீ கதை உடாதே..உனக்கு பசின்னு தெரியும்..காசு இல்லையா? என் காசு தரட்டா?” எனப் பாக்கெட்டிற்குள் கையை விட்டான் வாசு.

“இல்லடா..பரவாலெ” என மீண்டும் சிவா மேசையின் மீது தலையைப் பதித்தான்.

அவன் நினைவுகள் எட்டிப் பாய்ந்தன. மூன்று நாட்களுக்கு முன் சிவாவின் 3 வயது தங்கை மாலினி ஆச்சிக் கடையில் தொங்கிக் கொண்டிருந்த கரடி பொம்மையைப் பார்த்துவிட்டு அது வேண்டும் என அடம் பிடித்தாள். சிவாவின் அம்மா மாலினியைப் பிடித்து இடுப்பில் வைத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இருந்தும் மாலினி இரவு முழுக்க அழுது அடம் பிடித்தாள்.

சிவாவிற்குத் தன் தங்கை என்றால் பிரியம். அவளுக்கு விளையாட்டுக் காட்டி மகிழ்ச்சிப்படுத்துவது அவனுக்குப் பிடித்தமான விசயம். அவள் அழுது அழுது கண்கள் வீங்கி அப்படியே தூங்கியதைச் சிவா வேதனையுடன் கவனித்தான். அவனுக்குக் கொடுக்கும் சாப்பாடு பணம் ஒரு வெள்ளியை அன்றாடம் சேமித்தான். மூன்று நாள் அவன் சரியாகச் சாப்பிடவும் இல்லை. இப்பொழுது கைவசம் 3 வெள்ளி.

“டேய்ய் சிவா..என்னடா?” என வாசு மேசையைத் தட்டியதும் அவன் நினைவுகள் திரும்பின.

சிவா கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு தன் பாக்கெட்டிற்குள் இருந்த ஒரு வெள்ளித் தாளை வெளியே எடுத்தான். வெளியே எட்டிப் பார்க்க வெட்கப்பட்டுக்கொண்டு முகத்தை மூடியிருந்தது ஒரு வெள்ளி தாள். இத்துடன் நான்கு ரிங்கிட். இருப்பினும் கரடிப் பொம்மைக்கு இன்னும் ஒரு வெள்ளி வேண்டும்.

பள்ளி மணி ‘ட்ரிங்ங்ங்ங்’ என அலறியது. சிவா நடக்கவே சிரமப்பட்டான். அவன் நடை தடுமாறியது. இன்று வியாழக்கிழமை. இன்னும் ஒரு வெள்ளி சேமிக்க இரண்டு நாள் காத்திருக்க வேண்டும் என்ற வேதனை அவனின் தொண்டையை அடைத்தது. சட்டென கீழே விழப்பார்த்தான். வாசு அவன் தோளைப் பிடித்துக் கொண்டான்.

“என்னடா நீ..சாப்டாமே இப்படிப் பண்றே? சொன்னா கேட்கவே மாட்றெ” எனப் புலம்பிக் கொண்டே வந்தான் வாசு.

“இவனிடம் எப்படிச் சொல்வது? கவலையில் பல நாள் சாப்பிடலையே” என மனத்தில் விம்மினான் சிவா.

பேருந்தை விட்டு இறங்கியதும் சிவா நேராக ஆச்சிக் கடைக்கு நடந்தான். அவன் கையில் நான்கு வெள்ளி அப்படியே பதுங்கியிருந்தது. ஒரு வெள்ளி குறைந்தாலும் அந்தக் கஞ்சம் பிடித்த ஆச்சிப் பொம்மையைத் தரமாட்டாள். ஆச்சிக் கடையின் வாசலுக்கு வந்ததும் வெளியே கரடிப் பொம்மை காற்றில் ஆடியப்படியே தொங்கிக் கொண்டிருந்தது. சோகத்துடன் அந்தப் பொம்மையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென ஒரு சைக்கிள் வந்து நின்றது. போத்தக்காரத் தாத்தா சைக்கிளைவிட்டு இறங்கி சிவாவிடம் வந்தார்.

“டேய் சிவா அன்னிக்கு அப்பாக்கூட வந்து போத்த பொறுக்கிப் போட்டியே...உனக்கு எதும் தரலெ, இந்த ஒரு வெள்ளி வச்சிக்கோ” என ஒரு வெள்ளித் தாளை நீட்டினார்.

சிவாவிற்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. விருட்டென அவர் கையிலிருந்து ஒரு வெள்ளித் தாளைப் பிடுங்கிக் கொண்டே கடைக்குள் நுழைந்தான். இப்பொழுது எங்கிருந்து வந்தது எனத் தெரியாத சக்தி அவன் உடலெல்லாம் பரவியது. உற்சாகம் நிரம்ப கரடிப் பொம்மையுடன் வீட்டை நோக்கி ஓடினான். வழி நெடுக அவன் தங்கை மாலினியின் சிரிப்பு சத்தமே அவனுக்குக் கேட்டுக்கொண்டிருந்தது.

-   கே.பாலமுருகன்


Tuesday, 17 February 2015

வாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி

மெதுப்பயில் மாணவர்களுக்கு இத்தகையதொரு பயிற்சியிலிருந்து தொடங்கலாம்.

கொடுக்கப்படும் சொல்லை, வினைச்சொல்லாக மாற்றி வாக்கியம் அமைக்கும் உத்தி


Sunday, 4 January 2015

யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்கான சிறுகதை வழிகாட்டி - 2015 : எளியத் தொடக்கத்தின் மூலம் கதையை முழுமையாக்குதல்

பள்ளியின் முதல் வாரத்தை இந்தப் பயிற்சியுடன் தொடங்கிப் பாருங்கள். நிச்சயம் மாணவர்களின் சிறுகதை படைப்பில் மாற்றத்தைக் காணலாம். உடனே சிறுகதையை எழுதுவதைவிட முதலில் தொடக்கத்திலிருந்து ஆரம்பித்தால் சிறப்பாகும். இந்தப் பயிற்சியை ஆசிரியர்கள் எங்கும் எப்பொழுதும் இலவசமாகப் பயன்படுத்தலாம். நன்றி. வாழ்த்துகள்.

- கே.பாலமுருகன்.





Friday, 2 January 2015

கற்பனைக் கட்டுரைத் தொகுப்பு + வழிகாட்டி + பயிற்சி நூல் ‘அற்புதத் தீவும் அதிசயக் காலணியும்’

புதிய நூற்றாண்டின் கல்வி நிலைக்கேற்ப உயர்நிலை சிந்தனையுடன் மாணவர்கள் எளிதில் புள்ளிகள் பெறும் வகையில் எழுதப்பட்ட 10 மாதிரி கற்பனைக் கட்டுரைகள் அடங்கிய நூல். 4, 5 & 6 ஆம் ஆண்டு மாணவர்கள் எளிய முறையில் அதே சமயம் மிகச் சிறந்த கற்பனையாற்றலுடன் கட்டுரையை எழுதுவதற்கு உதவும் வழிகாட்டி நூல் ரிங்கிட் மலேசியா 7.90 மட்டுமே.

வெளியாகி இரண்டு நாட்களிலேயே 4 சில தமிழ்ப்பள்ளிகள் புத்தகக் கட்டணப் பட்டியலில் சேர்த்துள்ளனர். ஒரு சில தலைமை ஆசிரியர்கள் தொலைப்பேசியின் மூலம் அழைத்துப் பாராட்டுகளைத் தெரிவித்தனர். மாணவர்களுக்கு இக்காலக்கட்டத்தின் அவசியமான நூல் எனக் கூறினர்.


மாதிரிக் கற்பனைக் கட்டுரைகள்

Ø  நான் உருவாக்க விரும்பும் அதிசய விமானம்
Ø  நான் இப்பொழுதே ஒரு பிரதமரானால்
Ø  நான் செல்ல விரும்பும் விநோதமான தீவு
Ø  நான் கட்ட விரும்பும் அதிசய வீடு
Ø  நான் உருவாக்க விரும்பும் அதிசய வகுப்பறை…மேலும் பல

மேலும் பல வழிகாட்டிப் பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

Ø  முன்னுரையை எப்படி எழுதலாம்?
Ø  முடிவை எப்படி எழுதலாம்?
Ø  பத்தி அமைப்பு முறை
Ø  கற்பனையை எப்படி விரிவாக்கலாம்? … மேலும் பல

மேலும் மாணவர்களின் கற்பனையை மதிப்பீடும் வகையிலான பயிற்சிகளும் அடங்கியுள்ளன.

Ø 
ஒவ்வொரு மாதிரிக் கற்பனைக் கட்டுரைக்கும் கீழே மாணவர்களுக்கு அதே தலைப்பில் பயிற்சிகள் உள்ளன

Ø  முன்னுரை எழுதும் பயிற்சி
Ø  முடிவுரை எழுதும் பயிற்சி
Ø  பத்தியை விரிவாக்கும் பயிற்சி
Ø  கருத்தைக் கற்பனையாக மாற்றும் உத்தி…மேலும் பல…

பத்து பிரதிகளுக்கு மேல் வாங்குபவர்களுக்குச் சிறப்புக் கழிவு உண்டு. ஆதரிக்கவும். உங்கள் மாணவர்களின் உயர்நிலை சிந்தனையையும் கற்பனையாற்றலையும் மேம்பட இந்த நூல் வழிகாட்டும். எளிய முறையில் மிகச் சிறந்த கற்பனைக் கட்டுரைகள் எழுத வழிகாட்டும்.


அனைத்துத் தொடர்புகளுக்கும்: ஆசிரியர் கே.பாலமுருகன் ( 0164806241) அல்லது 

Tuesday, 9 September 2014

மலேசியாவின் முதல் தமிழ் சிறுவர் மர்ம நாவல் வெளியிட்டு விழா

  
வணக்கம். வருகின்ற 20.09.2014 (சனிக்கிழமை) மாலை மணி 5.15க்கு சுங்கை பட்டாணி, The Carnivall Water Theme Park, LA FIESTA HALL மண்டபத்தில் சிறுவர்களுக்கான முதல் மர்ம நாவல் ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ வெளியிட்டு விழா நடைபெறவிருக்கின்றது..

இந்த நாவல் வெளியிட்டு விழாவை கெடா மாநில கல்வி இலாகாவின் மொழிப்பிரிவு உதவி இயக்குனர் திரு.பெ.தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பிக்கவிருக்கிறார். சிறுவர் நாவல் விமர்சனத்தை முதன்முறையாகத் தமிழ்ப்பள்ளி மாணவியான வ.பிரியங்கா அவர்கள் மேற்கொள்கிறார். இந்த நாவல் வெளியிட்டு விழா, கெடா மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான தமிழ்மொழிப் பாடக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கிறது. இந்த முதல் வரலாற்று முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கற்பனையாற்றலையும், இலக்கிய மொழிநடையையும், வர்ணனை செய்யும் ஆற்றலையும், சிறுகதை எழுதும் ஆற்றலையும் வளர்க்கவே இந்தச் சிறுவர் நாவல் முயற்சியை ஆசிரியரும் எழுத்தாளருமான கே.பாலமுருகன் மேற்கொண்டுள்ளார். உயர்நிலை சிந்தனையுடன் சிறுகதையை எழுத இந்த நாவல் துணைப்புரியும். ஒரு சிறுவர் நாவலின் விலை 10.00 ரிங்கிட் மட்டுமே.

பள்ளி மாணவர்களுக்கான சிறுவர் நாவல் பிரதிகளை நாவல் வெளியிட்டு விழாவிலேயோ அல்லது அதற்கு முன்பாகவோ தெரிவித்துப் பெற்றுக்கொள்ள ஆசிரியர் கே.பாலமுருகன் அவர்களைத் 0164806241 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம். ஒருவர் பத்து நாவல்கள் வாங்கி நம் சிறுவர்களுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் அன்பளிப்பு வழங்கும் வகையிலும் நன்கொடை தரலாம்.

மலேசிய இந்திய மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்க்கும் நோக்கிலேயே கடாரத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள தமிழின் முதல் சிறுவர் நாவல் முயற்சியைக் மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் ஆதரிக்கும் எனப் பெரிதும் நம்பப்படுகிறது.

  
.'மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்' எனும் என்னுடைய மலேசியாவின் முதல் சிறுவர் மர்ம நாவலை வாசிக்கவும் வெளியிட்டு விழாவிற்கு வரவும் இவர்கள் தயாராகிவிட்டார்கள். நீங்கள்? மலேசிய சிறுவர்களின் வாசிப்புப் பழக்கத்தை இந்தச் சிறுவர் நாவல் மேலும் தீவிரப்படுத்தும். நாவல் வாசிப்புப் போட்டி, நாவல் விமர்சனப் போட்டி, நாவல் இரசனை போட்டி, வாசிப்பு வாரம் எனப் பலவகையான நிகழ்ச்சிகளுக்கும் நீங்கள் இந்தச் சிறுவர் நாவல்களை வாங்கி ஆய்த்தப்படுத்தலாம். தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241




.

Monday, 1 September 2014

வழிக்காட்டி கட்டுரை: சிறுகதைக்கான மாதிரி தொடக்கம்

சிறுகதையின் தொடக்கம் கதைக்குள் நுழைவதற்கான வாசல் என்பதைக் கவனிக்கவும். அது சுவாரிஷ்யமாக இருத்தல் வேண்டும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கான மாதிரி தொடக்கங்களைப் படிக்கவும். (JPEG Format, can click and print)