மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Sunday, 5 August 2012

நான் ஒரு பள்ளிக் காலணி (தன் வரலாறு)


 குறிப்பு/விடுகதை

என்னை மாணவர்கள் பள்ளிக்கு அணிந்து செல்வார்கள். மாணவர்களின் பாதங்களில் முள் குத்தாமல் இருக்க நான் பாதுகாப்பாக இருப்பேன். நான் ஒரு பள்ளி காலணி.

பெயர்/தன்மை

என் பெயர் “ஸ்பார்க்”. நான் வெள்ளை நிறத்தில் இருப்பேன். என் உடலின் மேல்பகுதியில் இரண்டு பக்கங்களிலும் ஓட்டைகள் இருக்கும். அதில் கயிறைக் கோர்த்து என்னை இறுக்கிக் கட்ட முடியும். மாணவர்களின் கால்களை விட்டு எங்கும் போகமலிருக்க அப்படிக் கட்ட வேண்டும்.

பிறப்பு/ செய்யப்பட்ட விதம்

 நான் கோலாலம்பூரிலுள்ள ஸ்பார்க் காலணி தொழிற்சாலையில் பிறந்தேன். என்னை மாட்டுத்தோலால் தயாரித்தார்கள். நான் பளபளப்பாகக் காட்சியளிப்பேன். என்னுடன் என்னைப் போலவே பல நண்பர்கள் பிறந்தார்கள்.  என்னை ஒரு பெட்டிக்குள் வைத்து முழுமையாக அடைத்தார்கள்.

பயணம் / விற்பனை

ஒரு நாள் எங்களையெல்லாம் ஒரு செல்வந்தர் மாணவர்களுக்கு அன்பளிப்பாக  வழங்குவதற்காக  ரிங்கிட் மலேசியா 800.00 வெள்ளிக் கொடுத்து வாங்கிச் சென்றார். நாங்கள் ஒரு பெரிய காரின் மூலம் தமிழ்ப்பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். 


அப்பள்ளியின் தோட்டக்காரர் எங்களைக் காரிலிருந்து இறக்கி மண்டபத்தில் அடுக்கி வைத்தார். எல்லாம் மாணவர்களும் என் அழகைக் கண்டு வியந்தனர். அந்தச் செல்வந்தர் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு எங்களை அங்குள்ள 60 மாணவர்களுக்கு இலவசமாக அளித்தார். மேடையில் இருந்த மேசையிலிருந்து எங்களை ஒவ்வொருவராக எடுத்து மாணவர்களிடம் வழங்கினார்.

குமுதன் என்ற 5ஆம் ஆண்டு மாணவன் என்னைப் பெற்றுக்கொண்டான். என்னை அவன் மகிழ்ச்சியுடன் தொட்டுப் பார்த்தான். என் உடலின் வெண்மையைக் கண்டு வியந்தான். என் உடலை அவன் தொடும்போது எனக்குக் கூச்சமாக இருந்தது. அவனுடைய காலுக்கு மிகப் பொருத்தமானவனாகத் திகழ்ந்தேன். 

பயன்பாடு

அன்றிலிருந்து அவன் என்னைப் பள்ளிக்கு அணிந்து சென்றான். அவன் என்னை அணிந்ததும் அவனுடைய கால்களை நான் கெட்டியாகப் பிடித்துக் கொள்வேன். சாலையில் நடக்கும்போது என் மீது சேறும் அழுக்குகளும் படாமல் பாதுகாத்தான். வாரம்தோறும் என் உடலில் வெள்ளைச் சாயத்தைப் பூசுவான். என் மேனி புதிய அழகுடன் மிளிரும்.

அவன் என்னைப் பள்ளி முடிந்து வந்து பந்து விளையாடவும் பயன்படுத்தினான். அன்றாடம் மாலையில் என்னை அணிந்துகொண்டு பந்து விளையாடப் போட்டுச் செல்வான். அவன் பந்தைப் பலம் கொண்டு உதைக்கும்போது என் உடல் நடுங்கிப் போய்விடும்.

         அனுபவம்

சில நாட்களுக்குப் பிறகு என்னுடைய முன் வாய் கிழிந்துவிட்டது. எப்பொழுதும் வாய் பிளந்தே காணப்பட்டேன். குமுதன் நடக்கும்போது எதிரில் கிடக்கும் கற்களை அப்படியே விழுங்கிக் கொள்வேன். ஆதலால் அவன் என் மீது கோபமுற்றான். குமுதன் தன் அப்பாவிடம் என்னைக் காட்டி கடையில் கொடுத்து தைக்குமாறு கேட்டான். அவனுடைய அப்பாவும் என்னை மோட்டாரின் முன் வக்குளில் வைத்து எடுத்துக்கொண்டு போனார். போகும் வழியில் கனத்த மழையும் காற்றும் வீசியதால் இடையிலேயே நான் மோட்டாரிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டேன்.

தற்போதைய நிலை

 அந்தப் பக்கமாக வந்த ஒரு முதியவர் என்னைக் கண்டவுடன் மனம் மகிழ்ச்சியடைந்தார். வறுமையில் இருக்கும் அந்தக் குடும்பத்தின் பேரனுக்கு என்னைப் பரிசாக அளித்தார். என் பழைய நண்பன் குமுதனை நினைத்துக் கொண்டே என் புதிய நண்பனுக்காக வாழ்கிறேன்.


கே.பாலமுருகன்
 016-4806241


1 comment: