யூ.பி.எஸ்.ஆர் தமிழ் மொழியில் ஏற்படும் பிரச்சனைகளில் மிக முக்கியமானதாக
நான் கருதுவது மாணவர்களிடையே வரண்டு போயிருக்கும் கற்பனை வளமும், போதாமையாக இருக்கும்
சொற்களஞ்சியமும்தான். மாணவர்களிடையே இருக்கும் சிந்தனைக்கு வரிவடிவம் கொடுப்பதற்கான
தேவையான சொற்கள் அவர்களிடம் இருப்பதில்லை. ஆகவே, அவர்களின் சிந்தனை வெளிப்படாமல் சிக்கிச்
சிதைந்து போய்விடுகின்றது. அபாரமான சிந்தனையாக இருந்தாலும், வித்தியாசமான கற்பனை வளமாக
இருந்தாலும் சரி , முதலில் அதனையெல்லாம் அர்த்தமாக்குவதற்கு மொழி அவசியமாகும். மொழியின்
வழியே நாம் எதனையும் நிரூபித்துக் காட்ட முடியும். ஆகவே, மாணவர்களிடையே சொற்களைஞ்சியத்தை
வளர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். ‘சொல் மழையில் நனைதல்’ எனும் ஒரு திட்டத்தை
என் பள்ளியில் கடைப்பிடித்தேன். ஒவ்வொருநாளும் ஒரு புதிய சொல்லைக் கற்று அதனைச் சுகிப்பதுதான்
திட்டம்.
மாணவர்களிடையே உடனடியாகப் பெரிய மாற்றத்தைப் பார்க்க முடியவில்லை.
ஆனால், நாளடைவில் அவர்களிடம் வளர்ந்திருந்த மொழிவளத்தைக் கட்டுரையில் கவனிக்க முடிந்தது.
மாற்றத்திற்கு வித்திடுங்கள். நீண்ட முயற்சியில் சிறு அசைவுக்கூட வெற்றித்தான். இந்த
யூ.பி.எஸ்.ஆர் தமிழ் மொழி பக்கத்தில் தொடர்ந்து பகிர்வு நடைப்பெறும். இணைந்திருங்கள்.
கே.பாலமுருகன்
ஆசிரியர்
Puthumai......
ReplyDeletePalligalil amalaakkam seiyalaam...
Nandri aiyah....