மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

என்னைப் பற்றி

என்னைப் பற்றி- அறிமுகம்

பெயர்: கே.பாலமுருகன்
      9 ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்மொழிப் பாடத்திற்கான திறமிகு ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயலாற்றி வருகிறேன். மாநில தமிழ்மொழி பயிற்றி உருவாக்கத்திலும் இடம் பெற்றுள்ளேன்.

2006 முதல் மக்கள் ஓசை பத்திரிக்கையில் “ஒரு வீடும் சில மனிதர்களும்” எனும் கட்டுரைத் தொடர் மூலம் அறிமுகமானவன். 2004 தொடக்கம் கல்லூரியில் நடத்தப்பட்ட சிறுகதை போட்டிகளின் வழி வெற்றிப்பெற்று அடையாளப்படுத்தப்பட்டேன்.

1.   2008ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசு- “நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்” 

2.   2008 ஆம் ஆண்டு தோட்ட தொழிலாளர் சங்கமும் நில நிதி கூட்டுறவு சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் மூன்றாவது பரிசு: ‘உறவுகள் நகரும் காலம்’

3.   மலாயாப்பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதை போட்டிகளில்:
2007: முதல் பரிசு: போத்தக்கார அண்ணன்
2008: இரண்டாவது பரிசு: கருப்பாயி மகனின் பெட்டி
2009: ஆறுதல் பரிசு: சுப்பையாவுடன் மிதக்கும் ஆங்கில கனவுகள்

4.   மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதை-கவிதை போட்டிகளில்:
2007: சிறுகதை முதல் பரிசு: ‘நடந்து கொண்டிருக்கிறார்கள்’
2008: சிறுகதை: இரண்டாவது பரிசு: ‘பழைய பட்டணத்தின் மனித    
        குறிப்புகள்
         நான்காவது பரிசு: ‘உறங்கிக் கொண்டிருப்பவர்கள்’
         கவிதை முதல் பரிசும் சி.கமலநாதன் விருதும் கிடைத்தது.
2009: சிறுகதை: இரண்டாவது பரிசு: இருளில் தொலைந்தவர்கள்
        கவிதை முதல் பரிசும் எம்.ஏ.இளஞ்செல்வன் விருதும் கிடைத்தது.

5.   மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் இரண்டு சிறுகதைகள் 2008 ஆம் ஆண்டின் மாதந்திர கதை தேர்வில் சிறந்த கதைகளாகத் தேர்வு செய்யப்பட்டன.
     அலமாரி , அய்யப்பன் நாதர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் இருந்தது.

6.   இந்திய தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில்: நான்காவது பரிசு: “11மணி பேருந்து”

7.   சுஜாதா நினைவாக நடத்தப்பட்ட உலகளாவிய அறிவியல் புனைக்கதை போட்டியில் ஆசிய பசிபிக் பிரிவுக்கான சிறந்த கதை/ சிறப்புப் பரிசு: “மனித நகர்வும் இரண்டாவது பிளவும்” தேர்வுப்பெற்றன.

8.    மாவட்டக் கல்வி இலாகா – “சிறந்த ஆக்கச்சிந்தனைமிக்க எழுத்துக்கான” அங்கீகாரத்தை, ஆசிரியர் தினக் கொண்டாட்டம் 2009-இல் அளித்தது.

9. கவிதை தொகுப்பு: சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பகத்தின் மூலம் வெளியீடப்பட்டது. தலைப்பு: கடவுள் அலையும் நகரம்.

10. தொடர்ந்து தனது சொந்த வலைப்பக்கத்தில் சினிமா விமர்சனம், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வருகிறேன். (http://bala-balamurugan.blogspot.com/)

11. அநங்கம் என்கிற மலேசிய தீவிர சிற்றிதழை நடத்தியும் வருகிறேன், தற்போது அந்த இதழ் குரலற்றவர்களின் குரலைச் சுமந்துகொண்டு “பறை” என வெளிவருகிறது.

12. அண்மையில் என்னுடைய முதல் நாவலான “நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்” எனும் நாவலுக்கு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகமும் சிங்கப்பூர் முஸ்த்தப்பா அறக்கட்டளையும் இணைந்து கரிகாற் சோழன் விருதை வழங்கியுள்ளது.
http://bala-balamurugan.blogspot.com/2011/01/2010.html

13. கெடா மாநில சிறந்த சாதனைமிக்க இளைஞர் விருது 2012ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

14. 2012ஆம் ஆண்டில் மாவட்டக் கல்வி இலாகா புத்தாக்க ஆசிரியர் விருதை வழங்கிக் கௌரவித்தது.

3 comments:

  1. U a very Genius......keep it up!!!!!!!!

    ReplyDelete
  2. Naala thirai.nalla muyarchi.tamil palli manavargalukku sirantha ubagarananggal.ungga sevai thodaradfum ayya.puthaganggal kidaika thodarbu kolgiren nandri.

    ReplyDelete
  3. தங்களது தமிழ்ச் சேவை என்றும் தொடரட்டும்..மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்..!

    ReplyDelete