மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Wednesday 28 August 2013

சிறுவர் சிறுகதை எழுதும் பயிற்சிப் பட்டறை - கலைவாணி தமிழ்ப்பள்ளி



இன்று (28.08.2013) மாலை 2 மணி 

முதல் 5 மணி வரை பாடாங் 

லெம்புவில் இருக்கும் கலைவாணி 

தமிழ்ப்பள்ளியில் சிறுவர் சிறுகதை 

எழுதும் பட்டறையை

 வழிநடத்தினேன். 59 மாணவர்கள் 

ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

இதே பள்ளியில்தான் மாணவர்கள் 

மத்திய நான் பேசத் துவங்கியதும். 

2006ஆம் ஆண்டு கல்லூரியில் 

படித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்திலேயே கற்பனைவளம் தொடர்பாகப் 

பேசுவதற்காக இப்பள்ளிக்கு அழைக்கப்பட்டிருந்தேன். இப்பொழுதும் 

மீண்டும் 7 வருடம் கழித்து அதே பள்ளியின் மண்டபத்தில் பேசியது 

மகிழ்ச்சியாக இருந்தது.


Friday 23 August 2013

ஒரே நாள் இரண்டு தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி: மலக்கோவ் தமிழ்ப்பள்ளி & ஜாவி தமிழ்ப்பள்ளி

காலையிலேயே 8மணிக்கு ஜாவி தமிழ்ப்பள்ளியில் தேர்வு வழிகாட்டிப் பட்டறையைத் தொடங்கினேன். 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒரு சில மாணவர்கள் ஆர்வத்துடன் காணப்பட்டனர்.










பினாங்கு லாடாங் மலக்கோவ் தமிழ்ப்பள்ளியில் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி 2013. இந்தப் பட்டறையில் மொத்தம் 25 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதுவரை எந்தப் பள்ளியிலும் இல்லாமல், இப்பள்ளியில்தான் தலைமை ஆசிரியர் கடைசிவரை இருந்து பட்டறையில் கலந்துகொண்டார். மகிழ்ச்சியாகவும் இருந்தது. மாணவர்களைக் கேள்விக் கேட்குமாறு அவ்வப்போது கூறினார்.





Tuesday 20 August 2013

சிறுவர் சிறுகதை ஒரு வழிகாட்டி - ஆசிரியர்களின் கவனத்திற்கு

மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு, கீழ்கண்ட கட்டுரையைப் பதிவிறக்கம் செய்து வாசிக்கவும். மாணவர்களுக்குத் தவறான தகவல்கள் போய் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் நாம் அக்கறையாக இருக்க வேண்டும். யு.பி.எஸ்.ஆர் சோதனைக்கு இன்னமும் எத்தனையோ நாட்கள்தான் உள்ளன. ஆகவே விரைந்து செயல்படுவோம். நன்றி.

ஆசிரியர் கே.பாலமுருகன்






திறந்த முடிவு கட்டுரைக்கான புள்ளி அமைப்பு

1. பத்தி - பத்தி அமைப்பு முறைக்குப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இப்பகுதியில் பத்திகள் முறையாகவும் சரியான அளவிலும் இருக்க வேண்டும். குறைந்தது 7 பத்திகளாவது இருத்தல் வேண்டும். ஒரு பத்தியில் 3 - 5 வாக்கியங்கள் இடம் பெறலாம்.

2. வாக்கியம் - வாக்கியம் அமைத்தல் என்பது கட்டுரைக்கான அடிப்படையாகும். மாணவர்கள் கட்டுரையில் அமைத்திருக்கும் வாக்கியங்களுக்கும் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ஒரு வாக்கியம் குறைந்தது 5 சொற்களுக்கு மேல் இருக்க வேண்டும்.

3. சொல்வளம் - கட்டுரையில் சொல்வளம் என்பது முக்கியமானது. கலைச்சொற்கள், அருஞ்சொற்கள் போன்றவற்றை பயன்படுத்தி கட்டுரை எழுதிதல் அவசியம்.

4. நிறுத்தற்குறிகள் - கட்டுரையில் நிறுத்தற்குறி பயன்பாட்டிற்கும் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. முற்றுப்புள்ளி, காற்புள்ளி போன்றவற்றை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

5. எழுத்துப்பிழைகள் - எழுத்துப்பிழைகள்/இலக்கணப் பிழைகள் கட்டுரையில் எழுதுதல் கூடாது. புள்ளிகள் குறைக்கப்படும். எழுத்துப்பிழைகள் குறைவாக இருப்பின் இந்தப் பகுதியில் மாணவர்களுக்குப் புள்ளிகள் அதிகமாகக் கிடைக்கும்.

6. கருத்து - திறந்த முடிவு கட்டுரையில் கருத்துகள்தான் மிக முக்கியம் வாய்ந்தவையாகும். ஒவ்வொரு கட்டுரையிலும் குறைந்தது 5 கருத்துகள் இடம் பெறுதல் அவசியம் ஆகும். அந்தக் கருத்துகள் ஒவ்வொன்றும் தெளிவாக விளக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் சான்றுகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

முதன்மை கருத்து - துணைக்கருத்து - எடுத்துக்காட்டு

ஒரு சொல் கட்டுரையாக இருந்தாலும், தன்கதையாக இருந்தாலும் புள்ளிகள் இப்படித்தான் வழங்கப்படுகின்றன. வடிவக் கட்டுரைகளுக்கு மட்டும் வடிவத்திற்குத் தனியாகப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர்: கே.பாலமுருகன் (தமிழ் மொழி சிறப்பு ஆசிரியர்)