மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Tuesday 9 September 2014

மலேசியாவின் முதல் தமிழ் சிறுவர் மர்ம நாவல் வெளியிட்டு விழா

  
வணக்கம். வருகின்ற 20.09.2014 (சனிக்கிழமை) மாலை மணி 5.15க்கு சுங்கை பட்டாணி, The Carnivall Water Theme Park, LA FIESTA HALL மண்டபத்தில் சிறுவர்களுக்கான முதல் மர்ம நாவல் மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் வெளியிட்டு விழா நடைபெறவிருக்கின்றது..

இந்த நாவல் வெளியிட்டு விழாவை கெடா மாநில கல்வி இலாகாவின் மொழிப்பிரிவு உதவி இயக்குனர் திரு.பெ.தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பிக்கவிருக்கிறார். சிறுவர் நாவல் விமர்சனத்தை முதன்முறையாகத் தமிழ்ப்பள்ளி மாணவியான .பிரியங்கா அவர்கள் மேற்கொள்கிறார். இந்த நாவல் வெளியிட்டு விழா, கெடா மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான தமிழ்மொழிப் பாடக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கிறது. இந்த முதல் வரலாற்று முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கற்பனையாற்றலையும், இலக்கிய மொழிநடையையும், வர்ணனை செய்யும் ஆற்றலையும், சிறுகதை எழுதும் ஆற்றலையும் வளர்க்கவே இந்தச் சிறுவர் நாவல் முயற்சியை ஆசிரியரும் எழுத்தாளருமான கே.பாலமுருகன் மேற்கொண்டுள்ளார். உயர்நிலை சிந்தனையுடன் சிறுகதையை எழுத இந்த நாவல் துணைப்புரியும். ஒரு சிறுவர் நாவலின் விலை 10.00 ரிங்கிட் மட்டுமே.

பள்ளி மாணவர்களுக்கான சிறுவர் நாவல் பிரதிகளை நாவல் வெளியிட்டு விழாவிலேயோ அல்லது அதற்கு முன்பாகவோ தெரிவித்துப் பெற்றுக்கொள்ள ஆசிரியர் கே.பாலமுருகன் அவர்களைத் 0164806241 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம். ஒருவர் பத்து நாவல்கள் வாங்கி நம் சிறுவர்களுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் அன்பளிப்பு வழங்கும் வகையிலும் நன்கொடை தரலாம்.

மலேசிய இந்திய மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்க்கும் நோக்கிலேயே கடாரத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள தமிழின் முதல் சிறுவர் நாவல் முயற்சியைக் மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் ஆதரிக்கும் எனப் பெரிதும் நம்பப்படுகிறது.

  
.'மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்' எனும் என்னுடைய மலேசியாவின் முதல் சிறுவர் மர்ம நாவலை வாசிக்கவும் வெளியிட்டு விழாவிற்கு வரவும் இவர்கள் தயாராகிவிட்டார்கள். நீங்கள்? மலேசிய சிறுவர்களின் வாசிப்புப் பழக்கத்தை இந்தச் சிறுவர் நாவல் மேலும் தீவிரப்படுத்தும். நாவல் வாசிப்புப் போட்டி, நாவல் விமர்சனப் போட்டி, நாவல் இரசனை போட்டி, வாசிப்பு வாரம் எனப் பலவகையான நிகழ்ச்சிகளுக்கும் நீங்கள் இந்தச் சிறுவர் நாவல்களை வாங்கி ஆய்த்தப்படுத்தலாம். தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241




.

Monday 1 September 2014

வழிக்காட்டி கட்டுரை: சிறுகதைக்கான மாதிரி தொடக்கம்

சிறுகதையின் தொடக்கம் கதைக்குள் நுழைவதற்கான வாசல் என்பதைக் கவனிக்கவும். அது சுவாரிஷ்யமாக இருத்தல் வேண்டும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கான மாதிரி தொடக்கங்களைப் படிக்கவும். (JPEG Format, can click and print)


Thursday 14 August 2014

மாதிரிக் கட்டுரை: தன் வரலாறு: நான் ஒரு நீர்ப்புட்டி


தன்வரலாறு கட்டுரையை மாணவர்கள் தங்களின் சிந்தனைக்கேற்ப எழுதலாம்; ஆனால் அதன் கட்டமைப்பைப் பின்பற்றியே எழுத வேண்டும். கதையாக எழுதக்கூடாது.

தொடக்கம்: நேரடியாக நான் ஒரு நீர்ப்புட்டி என்றும் ஆரம்பிக்கலாம் அல்லது குறிப்புகள் கொடுத்தும் ஆரம்பிக்கலாம். ஆனால், பின்னோக்கு உத்தியில் மட்டும் ஆரம்பிக்கக்கூடாது. கவனிக்கவும்.






Tuesday 24 June 2014

தமிழ் மொழி தாள் 2 முன்னோட்டத் தேர்வு - 2014 (சொந்த தயாரிப்பு- Bahasa Tamil Peperiksaan Tambahan Percubaan

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும்,

தமிழ்மொழி தாள் 2 மாதிரி முன்னோட்டத் தேர்வுத் தாளைத் தயாரித்து இங்குப் பதிவேற்றம் செய்துள்ளேன். உங்கள் மாநிலத்திலோ மாவட்டத்திலோ பள்ளியிலோ இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எடுக்கப்பட்ட மூலத்தைத் தவறாமல் குறிப்பிடவும். : btupsr.blogspot.com

வெற்றிகரமாக இந்த ஆண்டின் தமிழ்மொழியைச் சிறப்பாகவும் கற்பனைவளத்துடனும் செய்வோம்.

கே.பாலமுருகன்.









Thursday 19 June 2014

வாக்கியம் அமைத்தல் பிரிவு அ- எளிய முறையே

D - E, நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு வாக்கியம் அமைத்தலை எளிய முறையில் அமைக்கும் வழியைக் கற்றுக்கொடுத்தாலே போதுமானது. 8-9 சொற்கள்தான் அமைக்க வேண்டும் அப்பொழுதுதான் புள்ளிகள் கிடைக்கும் என அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். 3-4 சொற்களிலும் பொருள் விளங்க வாக்கியம் அமைக்க முடியும். 

எடுத்துக்காட்டு: வலி : அண்ணன் வயிற்றில் ஏற்பட்ட வலியால் துடித்தான்.

படி: தம்பி புத்தகத்திலுள்ள கதைகளைப் படித்தான்.
(யோசித்துப் பாருங்கள் )

Saturday 7 June 2014

யூ.பி.எஸ்.ஆர் வழிகாட்டி - 2014

உங்கள் மாணவர்களுடன்/உங்கள் பிள்ளைகளுடன் குறைந்தபட்சம் 5 நிமிடம் அவர்களுக்குப் பிடித்த சினிமாவைப் பற்றியும், அவர்களுக்குப் பிடித்த காற்பந்து குழுவைப் பற்றியும், அவர்கள் பார்த்து இரசித்த ஓவியத்தைப் பற்றியும் பேசுங்கள். அவர்களுக்கு நாம் கொடுத்த அனைத்து சோர்வும் அந்த நேரத்தில் நீங்கும்.

வகுப்பில் பாடத்தைத் துவங்குவதற்கு முன் ஏதாவது ஒரு நகைச்சுவை துணுக்கைச் சொல்லுங்கள். அவர்கள் சிரிக்கும்போதே அவர்கள் கற்பதற்குத் தயாரிகிவிடுவார்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நாளில் 30 நிமிடவாது ஓடியாடி விளையாடி களைப்பதற்கு நேரத்தைக் கொடுங்கள். அவர்களுக்குரிய நேரம் அனைத்தையும் நீங்களே வடிவமைத்தைவிட அவர்களிடம் கொஞ்சம் கேளுங்கள்.

நீங்களும் இறுக்கமாக, அவர்களையும் இறுக்கமாக்கி நீங்கள் எதைக் கற்றுக்கொடுக்கப் போகிறீர்கள்?

இலகுவாக்குங்கள். இலவாகுங்கள்.

கற்றல் இலகுவாகுவதிலிருந்தே தன் ஆழத்தைச் சென்றடைகிறது.

அறிவுரை இல்லை, ஆலோசனை மட்டுமே.

உங்கள் ஆசிரிய நண்பன்
கே.பாலமுருகன்


Wednesday 4 June 2014

Teknik Menjawab Bahasa Tamil dan Bengkel Penulisan cerpen- Road show around Malaysia - 2014(Jan to March)


Kenangan bersama murid murid dan guru guru di seluruh Malaysia, selaku penceramah Teknik Menjawab Bahasa Tamil dan bengkel cerpen Kanak kanak. Bengkel dan teknik menjawab yang saya hadiri tahun 2014 pusingan pertama dari Januari hingga March.

Bengkel Penulisan Cerpen kepada Ibubapa SJKT TUN AMINAH JOHOR



Teknik Menjawab Bahasa Tamil - SJKT RRI KUALA SELANGOR

Teknik Menjawab Bahasa Tamil - SJKT Subramanya Barathe- P.Pinang

Bengkel Penulisan Cerpen untuk Guru Guru  - SJKT Batu Cave selangor 

Sunday 18 May 2014

தன் வரலாறு : நான் ஒரு பேனா

சிறுவர் முதல் முதியோர் வரை என்னை எழுதப் பயன்படுத்துகிறார்கள். நான் நீள் உருளை வடிவில் மெலிந்த உடலுடன் காட்சியளிப்பேன். என்னுள் உதிரம் ஊற்றப்பட்டிருக்கும். நான் தான் ஒரு பேனா.

என்னைப் பொதுவாகப் பேனா என்று குறிப்பிட்டாலும் என்னுடைய சிறப்பு பெயர் ‘பார்க்கார்’. ‘பார்க்கர்’ வம்சத்தில் பிறந்ததால் என்னையும் அப்படியே அழைத்தனர். என் உடலை இரும்பால் உருவாக்கினர். என் நுனிப்பகுதி எழுதுவதற்கு ஏதுவாகக் கூர்மையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். என் உடலின் மேல் பகுதியில் விசை பொருத்தப்பட்டிருக்கும் வேளையில் என்னுள் கருப்பு நிற மை ஊற்றப்பட்டிருக்கும்.

நான் பேரும் புகழும் பெற்ற வரலாற்று மாநிலமான மலாக்காவில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையைப் பூர்வீகமாகக் கொண்டவன். என்னைப் போலவே ஆயிரக்கணக்கானவர்கள் அங்கே தயாராகி உலகெங்கிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் முழு உருவம் பெற்றதும் நெகிழிப் பையால் போர்த்தி  பின்னர் ஒரு பெட்டிக்குள் அடுக்கப்பட்டோம். தரமான முறையில் தயாரிக்கப்பட்ட நானும் என் உடன் பிறப்புகளில் சிலரும் அங்கிருந்து ஒரு வானூர்த்தியின் மூலம் பினாங்கு மாநிலத்திற்கு அனுப்பப்பட்டோம்.

Friday 16 May 2014

துரைசாமி வாத்தியாருக்குப் பட்டம் என்றால் பிடிக்காது

3ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது பட்டம் விடுவதில் பைத்தியக்காரத்தனமான வெறி உருவாகியிருந்தது. எல்லாம் நண்பர்களும் எப்பொழுதும் ஒரு பட்டத்துடனே இருந்தார்கள். மாலையில் எல்லோரும் பட்டத்தை எடுத்துக் கொண்டு வருவதும் போவதுமாக இருப்பார்கள். அது பறந்ததா என்பதைப் பற்றி யாருமே கவலைப்பட்டதில்லை. கையில் ஒரு பட்டம் வைத்திருப்பதையே பெருமையாகக் கருதினார்கள். எல்லோரும் விரும்பும் ஒரு விளையாட்டுத் தனக்கும் தெரியும் எனக் காட்டிக்கொள்வதற்காகவே ஆப்பே கடையில் விற்கும் சூப்பர்மேன் ஸ்பைடர்மேன் படங்களுள்ள பட்டங்களை வாங்கிக் கொண்டு திரிவார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாகப் பட்டம் விடும் விளையாட்டின் மீது ஆசை கூடியிருந்த காலத்தில் பள்ளிக்கே மாணவர்கள் புத்தகைப்பையில் பட்டத்தை ஒளித்துக் கொண்டு வரத் துவங்கினார்கள். ஓய்வு நேரத்தில் திடலில் அதுதான் எங்களுக்கு விளையாட்டு. அந்தப் பட்டம் பறக்காது. எங்களின் தலைக்கு மேலாகத்தான் பறக்கும். அதனை ஒருவன் பிடித்துக் கொண்டு ஓடுவான். நாங்களெல்லாம் பின்னாடியே ஓடுவோம். அதுதான் பட்டம் விளையாட்டு.

துரைசாமி வாத்தியார் நடக்கும்போது கொஞ்சம் நொண்டுவார். அவர் மட்டுமே அப்பொழுது பள்ளியில் மாணவர்களுடன் இயல்பாகப் பேசிப் பழகக்கூடியவராக இருந்தார். நான் வாங்கிப் பெருமையாகக் கையில் வைத்திருந்த பட்டத்தைப் பார்த்துவிட்டு “என்னங்கடா பட்டம் விடுறீங்க.” என ஏசிவிட்டார். எனக்குப் பயங்கரக் கோபம். துரைசாமி வாத்தியாருக்குப் பட்டம் என்றால் பிடிக்காது என எல்லோரும் பேசிக்கொண்டனர். உடனே சூப்பர்மேன் பேட்மேன் எல்லாம் மறையத் துவங்கினர்.

Tuesday 25 March 2014

சிறுவர் சிறுகதை: இலையும் கட்ட ஜப்பானும்

சிறுவர் சிறுகதை சிறுவர்களின் உளவியலையும் சிறுவர்களின் பிரச்சனைகளையும் பேசுவதாக அமைய வேண்டும். இக்கதையை மாணவர்களுக்கு வாசிப்பதற்காக வழங்கவும். இக்கதையை என் அனுமதி இல்லாமல் வேறு எங்கும் பிரசுரம் செய்யக்கூடாது. காப்புரிமை சட்டத்தின்கீழ் அப்படிச் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆசிரியர்கள் தாராளமாக இக்கதையைப் பிரசுரிப்பது அல்லது உபயோகம் செய்வது தொடர்பாக என்னைத் தொடர்புக்கொள்ளலாம். கே.பாலமுருகன் : 0164806241