மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Sunday 9 December 2012

தேவதைகளின் காகிதக் கப்பல் நூல் விமர்சனம்


1சிறுவர் சிறுகதை: பெண்சில்


1. கதிரேசனின் முத்தம்மா மாடு
கதை : முத்தம்மா மாட்டை தன் தாய் போல வளர்கிறான் கதிரேசன். திடீரென்று ஒருநாள் முத்தம்மா காணாமல் போய்விடுகிறது. அதனால் படிப்பில் கவனம் சிதறுகிறது. பிராணிகள் மீது பாசமாக இருக்க வேண்டும் என பாடம் நடத்தும் ஆசிரியர், இறுதியில் பள்ளியில் எல்லை மீறி நுழைந்த மாட்டை அடித்து விரட்டுமாறு கூறுகிறார்.


கதாபாத்திரம் : கதிரேசன்
- பிராணிகள் மீது பாசம் கொண்டவன்
முத்தம்மா மாடு - கதிரேசனின் தாய்க்குச் சமம்
ஆசிரியர் - ஒரு முரண்பாடான கதாபாத்திரம், மாணவர்களுக்கு போதிக்கும்படி நடந்துக் கொள்ளவில்லை.
ஆசிரியர்கிட்ட இல்லாத பாசம் கதிரேசனிடம் பிராணிகள் மீது அதிகமாக இருக்கிறது. 
மாணவர்களால் புரிந்துக் கொள்ளக்கூடியக் கதை

2. முகிலனின் தேவதை
கதை : வேலைக் காரணமாக 5 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வரும் அப்பா. அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் மகனாக முகிலன். அதனால் அப்பாவை அடிக்கடி விசாரிக்கிறான். அவனை சமாளிக்க அம்மா பல பொய்களைக் கூறுகிறார். பச்சை நிற தேவதையுடன் பறந்துவிட்டார், குளியளறை தொட்டிக்குள் புகுந்து அப்படியே போய்விட்டார். அதை நிஜம் என நம்புகிறான் முகிலன். இறுதியில் ஒரு சூப்பர்மேன் போல உருவெடுத்து திருடனைப் பிடிக்கிறான் அப்பாவைப் போல.


கதாபாத்திரம் : முகிலன்
- அப்பா பிள்ளை, அப்பாவின் மீது அதிக ஏக்கம் கொண்டவன்.
அம்மா
- முகிலனை சமாளிக்கப் பல பொய்களைக் கூறுகிறார்.

அம்மா கூறும் பொய்களையும்  உண்மை என நம்பி (+ thinking) கற்பனை செய்து கொள்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
பல கற்பனை தளங்களை ஆசிரியர் அமைத்திருக்கிறார்.
மாணவர்களால் புரிந்துக் கொள்ளக்கூடியக் கதை

3. முகிலன் மோட்டார் கடை
கதை : முகிலன் காலையில் பள்ளிக்குச் செல்கிறான். மாலையில் தன் அப்பாவிற்கு உதவியாக மோட்டார் கடையில் வேலை செய்கிறான். அது அவனுடைய மாமாவிற்கு பிடிக்கவில்லை. அவனை கடிந்துக் கொள்கிறார். இறுதியில் யாராலும் பழுதுபார்க்க முடியாமல் போன தன் மாமாவின் மோட்டாதை முகிலன் பழுது பார்த்து சரி செய்கிறான். மாமா அவமானம் அடைகிறார். கல்வி மட்டும் முக்கியம் அல்ல கைத்தொழிலும் தேவை என்கிறான் முகிலன்.

கதாபாத்திரம் : முகிலன்
- தன் படிப்பிலும் அக்கறை உடையான், கைத்தொழிலும் தேவை என நம்புபவன்.
மாமா
- கல்வி மட்டுமே முக்கியம் என நினைப்பவர்.

தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப படிப்பு மட்டும் முக்கியமல்ல கைத்தொழிலும் தேவை என உணர்த்தும் கதை.
தற்போதை சூழ்நிலைக்கு ஏற்ற கதை.
   மாணவர்களால் புரிந்துக் கொள்ளக்கூடியக் கதை


4. நாசி லெமாக்
கதை : கபிலன் வசதியானவன், தினமும் பள்ளிக்கு உணவு கொண்டு வருபவன். முகுந்தன் ஏழைக் குடும்பத்து மாணவன், காலையில் வழங்கப்படும் இலவச சத்துணவு மட்டும்தான் அவனுக்குச் சாப்பாடு. கபிலனின் சாப்பாடு காணாமல் போய்விடுகிறது. அதை முகுந்தன்தான் எடுத்து விட்டான் என பலி சுமத்துகிறான் கபிலன். பாடத்தில் பின்தங்கிய மாணவன், ஏழை, அமைதியானவன், தனிமையில் இருப்பவன் என்பதால் அவன் மீதே அனைவரும் பலியை சுமத்தினர். முகுந்தன் அழுகிறான். ஆசிரியர் கபிலனின் நாசி லெமாக்வை நாய் எடுத்து விட்டது என கூறி கபிலனிடம் தருகிறார். கபிலன் அவமானத்தால் தலை குனிகிறான்.

கதாபாத்திரம் : கபிலன்
- வசதியானவன்
முகுந்தன் - பாடத்தில் பின்தங்கிய மாணவன், ஏழை, அமைதியானவன், தனிமையில் இருப்பவன்
முகுந்தன் போன்ற மாணவர்களை மற்ற மாணவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என ஆசிரியர் கட்டுகிறார்.
அனைத்து மாணவர்களும் செய்யும் தவற்றைச் சுட்டிக் கட்டுகிறார்.
மாணவர்களால் புரிந்துக் கொள்ளக்கூடியக் கதை

5. கடைசி வீடு
கதை : இரவு நேரத்தில் அந்த வீட்டில் மட்டும் ஒரு பெண் அலறும் சத்தம் கேட்கும். யாரும் அதை பெரிதுப்படுத்தமாட்டார்கள். ஆனால் முகிலனுக்கு மட்டும் அந்த வீட்டில் என்ன இருக்கிறது என தெரிந்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது. தன் நண்பனான மகேனை அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குச் செல்கிறான். மகேன் பயத்தில் பாதி வழியிலேயே திரும்பிவிடுகிறான். ஆனால் முகிலன் தொடர்ந்துச் சென்று அந்த வீட்டில் என்ன இருக்கிறது என அறிகிறான்.

கதாபாத்திரம் : முகிலன்
- தைரியமானவன், எதையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்
மகேன் – பயந்த சுபாவம் கொண்டவன்.
மாணவர்களிடம் இயல்பாகவே இருக்கும் எதையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்.
புதிய உத்தி - ஒரு கனவு போல் முடிக்காமல் உண்மையாகவே நடப்பது போல் முடித்தது.



6. முகிலனின் காலணி
கதை : அப்பா காலையில் கொடுத்துத் தைக்கச் சொன்ன தன் தங்கையின் காலணியைத் தொலைத்துவிடுகிறான் முகிலன். அதனால் அகிலா தினமும் அழுகிறாள். காலையில் அகிலா தன் அண்ணனின் பெரிய காலணியையும் மாலையில் அதே காலணியை முகிலன் அணிந்துக் கொண்டுச் செல்வதாகவும் ஒப்பந்தம் செய்துக் கொள்கிறார்கள். ஆனால் அகிலாவை தோழிகள் கேலி செய்வதால் தனக்கு புதிய காலணி வேண்டும் என தன் அண்ணனிடம் கேட்கிறாள். முகிலனும் மாவட்ட அளவில் நடைபெறும் குறுகோட்டப் போட்டியில் முதல் இடத்தை விட்டுக் கொடுத்து இரண்டாவதாக வந்து காலணியை பரிசாகப் பெறுகிறான். ஆசிரியர்கள் அவனைக் கடிந்துக் கொள்கிறார்கள். ஆனால் தன் தங்கை அடையப் போகும் மகிழ்ச்சிக்கு முன்னால் அந்த பேச்சுகள் அவனுக்குப் பெரியதாகப் படவில்லை.

கதாபாத்திரம் : முகிலன் 
- தங்கையின் மீது பாசமும் தந்தையின் மீது மரியாதையும் கொண்டவன்.
அகிலா - அண்ணன் மீது மிகுந்த அன்பு கொண்டவள்
அண்ணன் தங்கை உறவைக் காட்டிருக்கிறார்.
தங்கைக்காக முதல் இடத்தை விட்டுக் கொடுப்பது தன் தங்கையின் மீது அண்ணன் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது.
மாணவர்களிடம் சுலபமாகப் போய்ச்சேரும் கதை.

7. மணியம் பேருந்து
கதை : முகிலனின் அப்பா காயமுற்று 3 மாதம் வீட்டில் இருப்பதால் பேருந்துக் கட்டணம் கட்ட முடியவில்லை. அதனால் பேருந்து உரிமையாளரிடம் திட்டு வாங்குகிறான். தன்னால் முடிந்த அளவு அவரிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறான். ரவி வசதியானவன். இருவரும் நண்பர்கள். பேருந்து ஓட்டுனர் வழக்கத்திற்கு மாறாக பேருந்தை வேகமாக செலுத்துகிறார். பேருந்து நிற்பதற்கு முன்பாகவே கதவு திறந்துக் கொள்கிறது. நிதானம் இல்லாமல் ரவி கதவின் வெளியே விழும் தருணத்தில் முகிலனால் காப்பாற்றப்படுகிறான். ஓட்டுனரை கவனமாக பேருந்தை ஓட்டுமாறு முகிலன் கூறுகிறான்.

கதாபாத்திரம் : முகிலன்
- உதவும் குணம் கொண்டவன், வசதியற்றவன்
மணியம் - பேருந்து ஓட்டுனர், உதவ்ம் குணமற்றவர்.
சில சமயம் சிறுவர்களுக்கு இருக்கும் பொறுமையும் உதவும் குணமும் பெரியவர்களுக்கு இல்லை என்பதை மிகவும் அழுத்தமாக உணர்த்துகிறார் ஆகிரியர்.
கதை விறுவிறுப்பாக இருப்பதால் மாணவர்களை படிக்கத் தூண்டும்.

8. காகிதக் கப்பல்
கதை : எழுத்துகளை சரியாக உள்வாங்கிக் கொண்டு எழுத முடியாத நோயான Difleksia என்ற  நோயால் அவதியுருகிறாள் சுமதி. எழுத்துகளை தலைகீழாக எழுதி, பென்சிலை சரியாக பிடித்து எழுத முடியாத சுமது துரைசாமி ஆசிரியரின் கோபத்திற்கு ஆளாகிறாள். ஒருநாள் ஆசிரியர் வகுப்பிற்கு வர கொஞ்சம் தாமதமாகிறது. அதற்குள் சுமதி தனக்கு எழுதத் தெரியாத ‘மா’ எனற எழுத்தை காகிதக் கப்பல்களைச் செய்து கம்பியில் கோர்த்து வடிவமைத்து இரசிக்கிறாள். அதற்குள் துரைசாமி ஆசிரியர் வந்துவிடுகிறார். அவளைக் கடிந்துக் கொள்கிறார்.

கதாபாத்திரம் : சுமதி
- எழுத்துகளைத் தலைகீழாக எழுதுபவள், பென்சிலை சரியாகப் பிடிக்க முடியாது
துரைசாமி ஆசிரியர் - மாணவியின் கற்கும் திறனை அறிய முயற்சிக்காதவர்.
இந்த காலத்தில் பள்ளிகளில் நடைப்பெறும் கற்றல் கறித்தலை அடிப்படையாகக் கொண்டு இக்கதையை எழுதியிருக்கிறார்.
பல கற்றல் கற்பித்தல் முறைகள் இருந்தும் அதை பயன்படுத்த முயற்சிக்காத ஆசிரியரைக் காட்டுகிறார்.
சுமதிக்கு கைவேலைக் கொண்டு போதித்திருந்தால் படித்திருப்பாள் என அனைவரையும் தோன்ற வைக்கிறது.
மாணவர்களுக்கு இந்த நோயைப் பற்றி தெரிய வேண்டியது அவசியம்  


முகிலனின் வண்ணத்துப் பூச்சி

கதை : முகிலன் தன் கற்பனையில் தோன்றும் காட்சிகளை நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்கிறான். முதலில் அனைத்து உண்மை என நம்பிய நண்பர்கள் இப்போது அவன் கூறும் கதைகளை யாரும் கேட்பதும் இல்லை நம்புவதும் இல்லை. அன்று தன் கற்பனையில் வந்த 5 நிற வண்ணத்துப் பூச்சியைப் பற்றி நண்பர்களிடம் பேசலானான். ஆனால் அனைவரும் அவன் கூறுவதை அலட்சியம் செய்கிறார்கள். இறுதியில் அறிவியல் பாடத்தின் போது அவன் கூறிய வண்னத்துப் பூச்சிப் போலவே ஒரு வண்ணத்துப் பூச்சி வகுப்பினுள் நுழைந்து அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது.

கதாபாத்திரம் : முகிலன்
- கற்பனைத் திறன்மிக்கவன்

சில சமயங்களில் சிறுவர்களின் கற்பனைத் திறன் பெரியவர்களின் கற்பனைத் திறனையும் மிஞ்சுகிறது என்பதைக் காட்டுகிறார்.
மாணவர்களைக் கவரக்கூடிய கதை.



பொது 
 தொடக்கம் – பழைய முறையில் இல்லாமல் சிறுகதையின் முறையைப் பயன்படுத்துதல்.
மொழிநடை - மாணவர்களுக்கு புரியக்கூடியவை ( கண்டிப்பாக உரையாடலும் மாணவனின் எண்ணத்தையும் பிரதிபலிக்க வேண்டும்)
பின்னணி - மலேசியாவில் வாழும் பல தரப்பட்ட மாணவர்களின் வசிப்பிடம் ( கம்போங், சீனக்கம்பம், பள்ளி வளாகம், வகுப்பறை)
கதைமாந்தர்கள்  - மாணவர்கள் (முகிலன்)
வர்ணனை – மாணவர்களின் கற்பனைத் தளத்திற்கு ஏற்றார் போல் உள்ளது. 
கதைக்களம் – வர்ணனை நேரத்தை விளக்க வேண்டும்.
முடிவு - சிறுவர் சிறுகதை எப்போதும் நன்மையாகவே முடிய வேண்டும். (+ve ending)
ஆக்கம்: எழுத்தாளர் குமாரி வெ.தனலெட்சுமி    


No comments:

Post a Comment