மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Sunday, 5 August 2012

Bengkel Bahasa tamil SJKT SG BONGKOH

Tahun ini sekolah yang kedua dari  Negeri Kedah  yang memanggil saya untuk memberi bengkel kepada murid UPSR bagi matapelajaran Bahasa Tamil. Selama dua jam saya meluangkan masa bersama murid murid tahun 4,5 & 6 bagi menerangkan tentang kertas 1 bahasa Tamil.

Setiap bahagian dalam kertas 1 harus diberi penekanan yang mendalam. Kadang kadang walaupun murid pandai menghafal tetapi masih dia boleh melakukan kesalahan. Ini adalah kerana "design of question" sentiasa berubah ubah dari semasa ke semasa. Murid yang hanya menghafal sesuatu bahagian secara linear tidak dapat menghadapi cabaran dari sudut yang berlainan semasa menjawab soalan. 

Saya telah menghadiahkan buku kepada murid murid yang sudi memberi pendapat dan menjawab soalan yang dikemukan oleh saya. Sebelum ini, saya telah pergi ke Negeri Melaka untuk memberi bengkel kepada murid dan guru guru bahasa tamil disana. Respons yang diterima daripada murid di SJKT BATANG MELAKA juga sangat baik.

K.BALAMURUGAN

மொழியும் கற்பனைவளமும்


யூ.பி.எஸ்.ஆர் தமிழ் மொழியில் ஏற்படும் பிரச்சனைகளில் மிக முக்கியமானதாக நான் கருதுவது மாணவர்களிடையே வரண்டு போயிருக்கும் கற்பனை வளமும், போதாமையாக இருக்கும் சொற்களஞ்சியமும்தான். மாணவர்களிடையே இருக்கும் சிந்தனைக்கு வரிவடிவம் கொடுப்பதற்கான தேவையான சொற்கள் அவர்களிடம் இருப்பதில்லை. ஆகவே, அவர்களின் சிந்தனை வெளிப்படாமல் சிக்கிச் சிதைந்து போய்விடுகின்றது. அபாரமான சிந்தனையாக இருந்தாலும், வித்தியாசமான கற்பனை வளமாக இருந்தாலும் சரி , முதலில் அதனையெல்லாம் அர்த்தமாக்குவதற்கு மொழி அவசியமாகும். மொழியின் வழியே நாம் எதனையும் நிரூபித்துக் காட்ட முடியும். ஆகவே, மாணவர்களிடையே சொற்களைஞ்சியத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். ‘சொல் மழையில் நனைதல்’ எனும் ஒரு திட்டத்தை என் பள்ளியில் கடைப்பிடித்தேன். ஒவ்வொருநாளும் ஒரு புதிய சொல்லைக் கற்று அதனைச் சுகிப்பதுதான் திட்டம்.

நான் ஒரு பள்ளிக் காலணி (தன் வரலாறு)


 குறிப்பு/விடுகதை

என்னை மாணவர்கள் பள்ளிக்கு அணிந்து செல்வார்கள். மாணவர்களின் பாதங்களில் முள் குத்தாமல் இருக்க நான் பாதுகாப்பாக இருப்பேன். நான் ஒரு பள்ளி காலணி.

பெயர்/தன்மை

என் பெயர் “ஸ்பார்க்”. நான் வெள்ளை நிறத்தில் இருப்பேன். என் உடலின் மேல்பகுதியில் இரண்டு பக்கங்களிலும் ஓட்டைகள் இருக்கும். அதில் கயிறைக் கோர்த்து என்னை இறுக்கிக் கட்ட முடியும். மாணவர்களின் கால்களை விட்டு எங்கும் போகமலிருக்க அப்படிக் கட்ட வேண்டும்.

பிறப்பு/ செய்யப்பட்ட விதம்

 நான் கோலாலம்பூரிலுள்ள ஸ்பார்க் காலணி தொழிற்சாலையில் பிறந்தேன். என்னை மாட்டுத்தோலால் தயாரித்தார்கள். நான் பளபளப்பாகக் காட்சியளிப்பேன். என்னுடன் என்னைப் போலவே பல நண்பர்கள் பிறந்தார்கள்.  என்னை ஒரு பெட்டிக்குள் வைத்து முழுமையாக அடைத்தார்கள்.

பயணம் / விற்பனை

ஒரு நாள் எங்களையெல்லாம் ஒரு செல்வந்தர் மாணவர்களுக்கு அன்பளிப்பாக  வழங்குவதற்காக  ரிங்கிட் மலேசியா 800.00 வெள்ளிக் கொடுத்து வாங்கிச் சென்றார். நாங்கள் ஒரு பெரிய காரின் மூலம் தமிழ்ப்பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். 


அப்பள்ளியின் தோட்டக்காரர் எங்களைக் காரிலிருந்து இறக்கி மண்டபத்தில் அடுக்கி வைத்தார். எல்லாம் மாணவர்களும் என் அழகைக் கண்டு வியந்தனர். அந்தச் செல்வந்தர் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு எங்களை அங்குள்ள 60 மாணவர்களுக்கு இலவசமாக அளித்தார். மேடையில் இருந்த மேசையிலிருந்து எங்களை ஒவ்வொருவராக எடுத்து மாணவர்களிடம் வழங்கினார்.

குமுதன் என்ற 5ஆம் ஆண்டு மாணவன் என்னைப் பெற்றுக்கொண்டான். என்னை அவன் மகிழ்ச்சியுடன் தொட்டுப் பார்த்தான். என் உடலின் வெண்மையைக் கண்டு வியந்தான். என் உடலை அவன் தொடும்போது எனக்குக் கூச்சமாக இருந்தது. அவனுடைய காலுக்கு மிகப் பொருத்தமானவனாகத் திகழ்ந்தேன். 

பயன்பாடு

அன்றிலிருந்து அவன் என்னைப் பள்ளிக்கு அணிந்து சென்றான். அவன் என்னை அணிந்ததும் அவனுடைய கால்களை நான் கெட்டியாகப் பிடித்துக் கொள்வேன். சாலையில் நடக்கும்போது என் மீது சேறும் அழுக்குகளும் படாமல் பாதுகாத்தான். வாரம்தோறும் என் உடலில் வெள்ளைச் சாயத்தைப் பூசுவான். என் மேனி புதிய அழகுடன் மிளிரும்.

அவன் என்னைப் பள்ளி முடிந்து வந்து பந்து விளையாடவும் பயன்படுத்தினான். அன்றாடம் மாலையில் என்னை அணிந்துகொண்டு பந்து விளையாடப் போட்டுச் செல்வான். அவன் பந்தைப் பலம் கொண்டு உதைக்கும்போது என் உடல் நடுங்கிப் போய்விடும்.

         அனுபவம்

சில நாட்களுக்குப் பிறகு என்னுடைய முன் வாய் கிழிந்துவிட்டது. எப்பொழுதும் வாய் பிளந்தே காணப்பட்டேன். குமுதன் நடக்கும்போது எதிரில் கிடக்கும் கற்களை அப்படியே விழுங்கிக் கொள்வேன். ஆதலால் அவன் என் மீது கோபமுற்றான். குமுதன் தன் அப்பாவிடம் என்னைக் காட்டி கடையில் கொடுத்து தைக்குமாறு கேட்டான். அவனுடைய அப்பாவும் என்னை மோட்டாரின் முன் வக்குளில் வைத்து எடுத்துக்கொண்டு போனார். போகும் வழியில் கனத்த மழையும் காற்றும் வீசியதால் இடையிலேயே நான் மோட்டாரிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டேன்.

தற்போதைய நிலை

 அந்தப் பக்கமாக வந்த ஒரு முதியவர் என்னைக் கண்டவுடன் மனம் மகிழ்ச்சியடைந்தார். வறுமையில் இருக்கும் அந்தக் குடும்பத்தின் பேரனுக்கு என்னைப் பரிசாக அளித்தார். என் பழைய நண்பன் குமுதனை நினைத்துக் கொண்டே என் புதிய நண்பனுக்காக வாழ்கிறேன்.


கே.பாலமுருகன்
 016-4806241


Saturday, 4 August 2012

KEDAH & SELANGOR PERCUBAAN BAHASA TAMIL K1

ஆசிரியர்களுக்கான படைப்பிலக்கியம் பட்டறை 2012- மலாக்கா


கடந்த 20ஆம் திகதி மலாக்கா மாநிலம் சென்றிருந்தேன். பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திரு.ராஜா அவர்களின் மூலம் மலாக்கா ஆசிரியர்களுக்கு படைப்பிலக்கியம் பட்டறையை வழிநடத்த வாய்ப்புக் கிடைத்திருந்தது. காலையிலேயே 7.00மணிகெல்லாம் மலாக்கா செண்ட்ரலை வந்தடைந்திருந்தேன். அரை மணி நேரத்திற்குப் பிறகு ஆசிரியர் ராஜா பள்ளியிலிருந்து கிளம்பி என்னை அழைத்துப் போவதற்கு வந்தார்.
பள்ளி வளாகத்திலேயே குளித்துக்கொள்ளலாம் என்றதும் எனக்கு அசூசையாக இருந்தது. இருந்தபோதும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டேன். அங்கிருந்து அவருடைய பள்ளியான பத்தாங் மலாக்காவிற்குச் செல்வதற்கு ஒரு மணி நேரம் எடுத்தது. மலாக்கா காடுகளைக் கடந்து பாதை நீண்டுகொண்டே போனது. மிகவும் சிறிய பாதை. இரு வழிக்கு ரொம்பவும் நெருக்கடியாக இருந்தது. பத்தாங் மலாக்கா பற்றியும் மலாக்கா தமிழ்ப்பள்ளிகள் பற்றியும் திரு.ராஜா சொல்லிக்கொண்டே வந்தார். தமிழ் மொழி சார்ந்து இவ்வருடத்தில் அங்கு நிகழும் முதல் நிகழ்ச்சி இதுவென்று தெரிவித்தார். மற்றபடி அவர் தன் சக நண்பர்களுடன் இணைந்து தனிப்பட்ட முறையில் பல நிகழ்ச்சிகளை அங்குச் செய்து வருகிறார்.

கதையின் தொடக்கம் - UPSR KERTAS 2


கதையின் தொடக்கம் வித்தியாசமாக அமைய வேண்டும். அது மட்டுமே மற்றவர்களின் கதையிலிருந்து ஒரு மாணவனின் கதையை வித்தியாசப்படுத்திக் காட்டும். மேற்கண்ட படத்திற்கு எப்படியெல்லாம் தொடக்கத்தை எழுதலாம் எனப் பார்ப்போம்.

தொடக்கம் 1
அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் அவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். கமலாவின் கைகள் நடுங்கின. கமலா ‘ஆ!” என்றே கத்திவிட்டாள். அம்மா அப்பாவின் தோள் பட்டையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டார். என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் விழித்துக்கொண்டிருந்தார்கள்.

தொடக்கம் 2
மணி 11-ஐ நெருங்கியிருந்தது. கமலா வழக்கமாக இரவில் தாமதமாகத்தான் படுப்பாள். கமலா கெட்டிக்காரி மாணவி. இரவில் வெகுநேரம் கதைப்புத்தகங்களை வாசிக்கக்கூடியவள். ஆசிரியர் கொடுத்த பாடங்களை முடித்துவிட்ட பிறகே அறை சன்னலைச் சாத்துவாள். அன்றும் சன்னலைச் சாத்துவதற்காகச் சென்றால். அப்பொழுது...