மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Wednesday, 28 August 2013

சிறுவர் சிறுகதை எழுதும் பயிற்சிப் பட்டறை - கலைவாணி தமிழ்ப்பள்ளிஇன்று (28.08.2013) மாலை 2 மணி 

முதல் 5 மணி வரை பாடாங் 

லெம்புவில் இருக்கும் கலைவாணி 

தமிழ்ப்பள்ளியில் சிறுவர் சிறுகதை 

எழுதும் பட்டறையை

 வழிநடத்தினேன். 59 மாணவர்கள் 

ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

இதே பள்ளியில்தான் மாணவர்கள் 

மத்திய நான் பேசத் துவங்கியதும். 

2006ஆம் ஆண்டு கல்லூரியில் 

படித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்திலேயே கற்பனைவளம் தொடர்பாகப் 

பேசுவதற்காக இப்பள்ளிக்கு அழைக்கப்பட்டிருந்தேன். இப்பொழுதும் 

மீண்டும் 7 வருடம் கழித்து அதே பள்ளியின் மண்டபத்தில் பேசியது 

மகிழ்ச்சியாக இருந்தது.


No comments:

Post a Comment