மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Tuesday 13 March 2018

அறிக்கை மாதிரிக் கட்டுரை: கே.பாலமுருகன் வழிகாட்டல் : பள்ளி அளவிலான அறிவியல் விழா

உன் பள்ளியில் நடந்து முடிந்த அறிவியல் விழாவைப் பற்றி ஓர் அறிக்கை தயாரித்திடுக.


இளம் அறிவியலாளர்களை உருவாக்குவதற்காக கடந்த 23.03.2018ஆம் நாளில் தேசிய வகை திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில் அறிவியல் விழா நடத்தப்பட்டது. அறிவியல் பாடம் தொடர்பான பற்பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட அந்நிகழ்ச்சியில் மொத்தம் எழுபது மாணவர்கள் கலந்து கொண்டனர்.

காலை 8.30க்குச் சபைக்கூடலில் மாணவர்கள் ஒன்று கூடினர். அறிவியல் ஆசிரியர் மாணவர்களுக்கான விளக்கங்கள் விதிமுறைகள் போன்றவற்றை வழங்கினார். பின்னர், பள்ளி மண்டபத்தில் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆய்வுக்கூடங்களுக்கு மாணவர்கள் குழுவாரியாகச் சென்றனர். ஒவ்வொரு குழுவினரும் தங்களின் ஆய்வுக்கூடங்களை அலங்கரிக்கத் தொடங்கினர்.

காலை 9.00 மணிக்கு அறிவியல் விழா தொடங்கியது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.க.மணியம் அவர்களும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.செ.முனியாண்டி அவர்களும் மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்களைக் கண்கானிக்க வந்தனர். மாணவர்களின் ஆய்வுக்கூடங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. 

அறிவியல் விழாவின் தொடக்க உரையாக தலைமை ஆசிரியர் தலைமை உரை நிகழ்த்தினார். மாணவர்களின் அறிவியல் திறன் மேம்பாட்டிற்காக இதுபோன்ற அறிவியல் விழாக்கள் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். பின்னர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சிறப்புரை ஆற்றி அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பள்ளியைப் பிரதிநிதிக்கும் அறிவியல் ஆய்வாளருக்கு ரிங்கிட் மலேசியா 100 தருவதாக வாக்களித்தார். 

குழு ஒன்று புகையே பகைஎன்கிற தலைப்பில் புகை பிடிப்பதால் நுரையீறலுக்கு உருவாகும் பாதிப்புகளைப் பற்றி பஞ்சு, நெகிழ்ப் புட்டிப் போன்றவற்றின் மூலம் விளக்கினர். மேலும், குழு இரண்டு உயிரினங்களின் அடிப்படை தேவையைப் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர், குழு மூன்று முட்டையின் மிதவை திறன் பற்றியும் குழு நான்கு ஒளி நேர்க்கோட்டில் பயணிப்பதைப் பற்றியும் ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர்.

மதியம் 11.00 மணிக்கு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் தலைமை இயக்குனர் திரு.ப.சந்திரன் அவர்கள் சிறப்பு வருகை புரிந்தார். மாணவர்களின் ஆராய்ச்சிகளைப் பார்வையிட்டுச் சிறப்புரை ஆற்றினார். புகையே பகைஎனும் ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்த குழு ஒன்று அன்றைய அறிவியல் விழாவில் முதல் நிலையில் வெற்றிப் பெற்றது. குழு மூன்று தன் ஆராய்ச்சிக்காக புத்தாக்க விருதை வென்றது. மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பு விருந்தினர் நற்சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். பின்னர், அனைவருக்கு விருந்துபசரிப்பு நடத்தப்பட்டது. மாணவர்கள் தனக்குள் இருக்கும் இளம் ஆய்வாளர்களை அடையாளம் கண்ட மகிழ்ச்சியில் வீடு திரும்பினர்.


அறிக்கைத் தயாரித்தவர்,                                                             30 மார்ச் 2018
--------------------------------
ம.கனகா
செயலாளர், அறிவியல் விழா 2018
தேசிய வகை திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி


No comments:

Post a Comment