மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Friday 7 September 2018

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டிக் கட்டுரை - மாதிரி படங்கள்


தேர்வில் தமிழ்மொழிக் கட்டுரை பிரிவு ஆ-வில் மாணவர்கள் கொடுக்கப்பட்ட படத்தைக் கொண்டு ஒரு சிறுகதை எழுத வேண்டும். அச்சிறுகதைக்காகக் கொடுக்கப்படும் படம் எப்படி இருக்க வேண்டும் என்கிற தேடல் பரவலாகவே உள்ளது.

1. மாணவர்களைச் சிந்திக்கத் தூண்ட வேண்டும்.

வழிகாட்டிக் கட்டுரைக்கான படம் மாணவர்களைச் சிந்திக்க வைத்தல் வேண்டும். மேலும், ஓர் ஆக்கத்திற்காக அவர்களின் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அம்சம் அப்படத்தில் இருத்தல் வேண்டும்.

2. குறைந்தது ஒரு கதாபாத்திரம் இருத்தல் வேண்டும்.

படத்தில் கதாபாத்திரங்கள் இருந்தாலே மாணவர்களால் முதன்மை கதைமாந்தரைக் கண்டறிந்து எழுத முடியும். மேலும், காட்சிகளைக் கதாபாத்திரங்கள் கொண்டே நகர்த்திச் செல்ல ஏதுவாக இருக்கும். யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் கடந்த காலங்களில் வந்த சில படங்களில் ஒரே ஒரு கதாபாத்திரம் இருப்பதைக் கண்டிருக்கலாம்.

3. கண்டிப்பாக உரைக்குமிழ்/நினைவுக்குமிழ் இருத்தல் வேண்டும்.

கொடுக்கப்படும் படத்தில் வசனங்கள் இருத்தல் வேண்டும். அதன் மூலமே கதையைத் தொடர்ந்து அணுமானிக்க ஏதுவாக இருக்கும். படத்தில் இடம்பெறும் வசனம்/நினைவோட்டம் மட்டுமே சிறுகதையில் உள்ள சிக்கல், முதன்மைக் கதைமாந்தர் போன்றவற்றை ஊகிக்க உதவியாக இருக்கும்.


4. பலவகையான  முடிவை ஊகிக்கும் வகையில் இருத்தல் வேண்டும்.

வழிகாட்டிக் கட்டுரைக்கான படம் என்பது மாணவர்களின் கற்பனையாற்றலைத் தூண்டும் வகையில் அமைந்திருக்க வேண்டும். இல்லையென்றால் சிறுகதையை எழுதும் எல்லா மாணவர்களும் கதையை ஒரே மாதிரியாக முடிப்பார்கள். இதன் வழியாக மாணவர்களின் தனித்திறன்களை அடையாளம் காண இயலாது. ஆகவே, படம் என்பது அதற்குள் இருக்கும் முடிச்சுகள் மாணவர்களைப் பல கோணங்களில் சிந்திக்க வைக்க வேண்டும்.

-ஆக்கம்: கே.பாலமுருகன் 

கீழ்க்கண்ட சில மாதிரி படங்கள் மாணவர்கள் சிறுகதை எழுது துணையாக இருக்கும் என நினைக்கிறேன். தரவிறக்கம் செய்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்.

http://www.mediafire.com/file/k8zd26y2wfhfco0/வழிகாட்டிக்+கட்டுரை+மாதிரி+படங்கள்.pdf












No comments:

Post a Comment