மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Monday 18 July 2016

குட்டி எழுத்தாளர் சு.தரணியின் 'குகைக்குள் ஓர் அரண்மனை' - மர்மக் கதை


கிம்மாஸ் நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளியின் பயிலும் மாணவர் சு.தரணியின் கைவண்ணம் இது. எனது இரண்டு சிறுவர் நாவல்களையும் வாசித்து உருவான எனது சிறுவர் வாசகர் அவர். அப்பள்ளிக்குச் சென்றிருந்தபோது அவராகவே ஆர்வத்துடன் எழுதி கொடுத்த மர்மக் கதை இது. அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் வாசிக்க அதனை இங்கே பதிவிடுகிறேன். உங்கள் மாணவர்களின் சிறுகதைகள் இருந்தாலும் அனுப்பி வைக்கலாம்.



சிறுகதை: குகைக்குள் ஓர் அரண்மனை

மேகம் ஒரு கருமையான காகத்தைப் போல காட்சி கொண்டிருந்தது. அப்போது தரணியும் தரணியின் நண்பர்களும் மிதிவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பள்ளித் திடலுக்கு விளையாடச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தரணி, “டேய்ய்ய்.. வாங்கடா! காட்டு வழியாகப் போலாம்... அன்னாடம் இதே பாதைத்தான்கடுப்பா இருக்கு,” என்று கூறினான்.

உடனே மதன், “ஆமாம்டா. தரணி சொல்றதும் சரிதான்,” என்று கூறிவிட்டு காட்டுப் பாதைக்குள் சைக்கிளைச் செலுத்தினார்கள்.

அவர்கள் காட்டுப் பாதையாகப் போகும்போது நிறைய விலங்குகளின் சத்தங்கள் காட்டுக்குள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்தன. தரணிக்கு சற்று பயமாகவே இருந்தது. சைக்கிளை வேகமாக மிதித்தான். அப்போது சட்டென அவர்களின் பாதையின் நடுவே புலி ஒன்று படித்திருப்பதைக் கண்டனர்.

மூவரும் பதற்றத்தில், “ஐய்யயோ! புலி,” என்று அலறினார்கள்.

அந்தப் புலியும் அவர்களைத் துரத்தத் துவங்கியது. எங்கு ஓடுவதென்று தெரியாமல் நேராக அங்கிருந்த ஒரு குகைக்குள் நுழைந்தனர். மதன் தான் வைத்திருந்த கைவிளக்கை எடுத்துத் தட்டினான். வெகுதூரம் அக்குகைக்குள் போய்க் கொண்டிருந்தனர். மதன் அந்தக் கைவிளக்கால் சுற்றிலும் ஏதாவது இருக்குமா எனத் தேடினான். சட்டென ஒரு தங்க நாற்காலியும் ஓர் எலும்புக்கூடும் தென்பட்டன.

திடீரென்று அந்த நாற்காலியின் பின்னே ஓர் ஒளி தோன்றியது. அவ்வொளி பட்டதும் அந்த எலும்புக்கூடு எழுந்து நின்றது. அப்பொழுதுதான் அது ஒரு ராஜாவைப் போல காட்சியளிப்பது தெரிந்தது. திடீரென மதனின் கைவிளக்கும் பழுதாகிவிட்டது. குகையின் வாசலும் மூடும் சத்தம் கேட்டது. எங்கும் இருள். அனைவரும் அங்கிருந்து ஓடினார்கள். அப்பொழுது எதிரே இருந்த ஒரு சிலையைத் தரணி மோதி கீழே விழுந்தான். அப்பொழுதுதான் அது ஒரு பெரிய சிலை எனத் தெரிந்தது. அதற்கு உயிர் வந்து எழுந்து நின்றது.

என்னை ஏன் எழுப்பினீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என அச்சிலை கேட்டது.

நாங்க இந்தக் குகையெ விட்டு வெளில போகணும். புலி வெளில இருக்கு வேறகாப்பாத்த முடியுமா?” எனத் தரணி பயந்துகொண்டே கேட்டான்.

பயப்படாதீர்கள். இதுவொரு பழமையான அரண்மனை. இப்போது குகையாகவிட்டது. இதுக்கு இன்னொரு வாசல் இருக்கு, அதோ! அதன் வழியா போனால் நீங்கள் தப்பித்துவிடலாம்,” என அச்சிலை கூறியதும், மூவரும் தலை தெறிக்க அங்கு ஓடினர். கொஞ்சம் நேரத்தில் அக்குகையிலிருந்து வெளியாகும் வாசலும் வந்தது. மூவரும் வெளியேறி வீட்டை நோக்கி ஓடினர்.
டேய்ய்ய்! இனிமேல் கடுப்பா இருக்குனு காட்டுப் பாதையில வருவீங்க?” என மதன் கண்களை உருட்டிக் கொண்டே கேட்டான்.

யாரும் எந்தப் பதிலும் சொல்லாமல் ஓடுவதிலேயே குறியாக இருந்தனர்.


-            சு.தரணி, கிம்மாஸ் தமிழ்ப்பள்ளி, நெகிரி செம்பிலான்


 குட்டி எழுத்தாளர் சு.தரணியின் மர்மக் கதையை இங்கே பதிவிரக்கம் செய்யலாம்: https://www.mediafire.com/?8699464wm98focf

இதற்காகத்தானே சிறுவர் மர்ம நாவலை எழுதினேன், இதோ ஓர் எழுத்தாற்றல் ஒரு சிறுவனைக் கண்டறிந்தேன்.

தொகுப்பு: கே.பாலமுருகன்

3 comments:

  1. Nice story.. All the best for you Tharani☆☆

    ReplyDelete
  2. Superb..... Talented kid...

    ReplyDelete
  3. மகிழ்ச்சி!
    அழகான முயற்சி!
    வாழ்த்துகள் பாலா சார்!

    ReplyDelete